அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா உற்றுநோக்கல் அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் - ஏரிஸ், ' உயர் இமயமலைப் பகுதியில் காற்றுத் தரம் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நீர் ஆதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதுஏற்படும் தாக்கம் ' என்பது குறித்த வலைதள சர்வதேசக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Posted On: 24 AUG 2020 12:11PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படும்  நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா உற்றுநோக்கல்  அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் -ஏரிஸ், உத்தரகண்ட்
மாநிலம் பாவ்ரி கார்வால் பகுதியில் ஸ்ரீநகரில் செயல்படும் மத்திய
பல்கலைக் கழகமான ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக் கழகம் ஆகியன இணைந்து  கூட்டாக  ' உயர் இமயமலைப் பகுதியில்  காற்றுத்தூசுத்தரம் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நீர் ஆதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏற்படும் தாக்கம்' என்பது குறித்த 3 நாள் வலைதள சர்வதேசக் கருத்தரங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழா நினைவுக்
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தச் சர்வதேசக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் நைனிடால் ஏரிஸ
நிறுவனத்தில்  நடைபெறும் முதலாவது வலைதளக் கருத்தரங்கு இது ஆகும்.

இம்மாநாட்டில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் கீழ்கண்ட கருத்துக்களில் உரை ஆற்ற
உள்ளனர். சிந்து-கங்கை சமவெளிப்பகுதியிலும் மத்திய கங்கை இமயமலைப் பகுதியிலும் வளர்ந்து வரும் காற்றுத் தூய்மைக்கு கேடு, இமயமலைப் பகுதிப்
பனிப்படலங்கள், இமயமலைப்  பகுதியில் பனிப்படலம் மற்றும் பருவமழை மீது
பருவநிலை மாற்றத்தின் தாக்கம், தீவிர நிகழ்வுகள் போன்றவை. இந்த
கருத்தரங்கின் மதிப்பீடு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் "காற்றுத் தூசு
-பருவநிலை பரஸ்பரத் தாக்கம் மற்றும் இமயமலை பகுதியில் நீர் ஆதாரங்கள்" என்ற தலைப்பில் புவி அமைப்பு அறிவியல் சஞ்சிகை - ஜெஸ்-ல் வெளியிடப்படும்.


(Release ID: 1648259) Visitor Counter : 172