மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப உதவும் புதுமை அம்சமாக `வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவையை' அறிமுகம் செய்தது ஆரோக்கிய சேது

Posted On: 22 AUG 2020 3:08PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலுடன் வாழப் பழகிக் கொள்வது என்ற புதிய நியதியை நோக்கி நாம் நகரும் நிலையில், `வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவை'  என்ற புதிய புதுமைச் சிந்தனைச் சேவையை ஆரோக்கிய சேது செயலிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் பாதுகாப்பாக செயல்படத் தொடங்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும். ஆரோக்கிய சேது நிலையை இந்த நிறுவனங்கள் கண்டறிந்து, வீட்டில் இருந்தே வேலைபார்க்கும் பல்வேறு அம்சங்களுடன் ஒருங்கிணைப்பு செய்து கொள்ள இந்தச் சேவை உதவிகரமாக இருக்கும். ஆரோக்கிய சேதுவின் `வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவை'  கோவிட்-19 பாதிப்பு குறித்த அச்சத்தை நீக்கி, மக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்ப உதவியாக இருக்கும்.

வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவை

ஆரோக்கிய சேதுவின் வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவையை, 50க்கும் மேற்பட்ட அலுவலர்களுடன் இந்தியாவில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். தங்களுடைய அலுவலர் அல்லது ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தும் எந்த நபருடைய ஆரோக்கியம் பற்றிய தகவலையும், இதன் மூலம் உடனுக்குடன் விசாரித்து அறியலாம். இதற்கு ஆரோக்கிய சேது செயலிபயன்படுத்துபவர், தனது உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். அந்த அலுவலரின் ஆரோக்கிய சேது மற்றும் அவருடைய பெயரை (அவருடைய ஒப்புதலின் பேரில்) மட்டுமே `வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவை'  தெரிவிக்கும். அவருடைய வேறு எந்த அந்தரங்கத் தகவலும் இதில் தெரிவிக்கப்படாது.

வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவையைப் பெறுவதற்கு பின்வரும் இணையதள சுட்டியில் பதிவு செய்து கொள்ளலாம்: https://openapi.aarogyasetu.gov.in

 

வெளிப்படையான ஏ.பி.ஐ. சேவை குறித்த தொழில்நுணுக்க தகவல்களுக்கு பின்வரும் தொடர்பைப் பயன்படுத்தலாம்: openapi.aarogyasetu[at]gov[dot]in

 

 

*******(Release ID: 1647895) Visitor Counter : 247