சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள நமது தேசத்தைப் பாருங்கள் இணையவழித் தொடரின் கீழ், ‘’ தற்சார்பு இந்தியா- சுற்றுலா, பயணம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்’’ என்ற தலைப்பில் 50-வது அத்தியாயம்

प्रविष्टि तिथि: 22 AUG 2020 1:40PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா- சுற்றுலா, பயணம் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் தனது 50-வது இணைய வழி வெபினாரை 2020 ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. இதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை (எம்எஸ்எம்இ), அதன் பிரிவுகள், அந்த தொழில்களுக்கான பதிவு நடைமுறைகள், சேவைத் துறைக்கான எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கடன்/நிதித் திட்டங்கள், பொது கொள்முதல் கொள்கை போன்றவை குறித்து விளக்கப்பட்டன. எம்எஸ்எம்இ திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்களில் இருந்து பயன் பெறும் அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களை வழங்கி, வழிகாட்டும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்த வெபினாரை, எம்எஸ்எம்இ வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் திரு. தேவேந்திர குமார் சிங், எம்எஸ்எம்இ அமைச்சக கூடுதல் வளர்ச்சி ஆணையர் திரு.ஆனந்த் செர்கானே ஆகியோர் வழங்கினர். 2006-ஆம் ஆண்டு எம்எஸ்எம்இ வளர்ச்சி திட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர், 2020 மே 13-ம் தேதி தற்சார்பு இந்தியா தொகுப்பில், இதன் வரையறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, குறு உற்பத்தி மற்றும் சேவைகள் அலகுகளுக்கான வரையறை ரூ.1கோடி மூலதனம், ரூ.5 கோடி விற்றுமுதல் என அதிகரிக்கப்பட்டது. சிறு அலகுகளின் அளவு ரூ.10 கோடி மூலதனம், ரூ.50 கோடி விற்றுமுதல் எனவும், இதே போல, நடுத்தர அலகின் ரூ.20 கோடி மூலதனம், ரூ.100 கோடி விற்றுமுதல் எனவும் அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு 01.06.2020 அன்று இந்த வரையறையை மேலும் உயர்த்த முடிவு செய்தது. அதன்படி, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தற்போது ரூ.50 கோடி மூலதனம் மற்றும் ரூ.250 கோடி விற்றுமுதல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

தன்னிறைவு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக, ரூ.200 கோடி வரை உலக டெண்டர்களுக்கு அனுமதி இல்லை. இது தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியாவை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும். திட்டத்தின் மானியப் பயன்கள் குறித்தும் அவர்கள் விளக்கி, அது பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பொதுப் பிரிவுப் பயனாளிகள், ஊரகப்பகுதிகளில் திட்டச் செலவில் 25 சதவீதம்  விடுமிகை தொகை மானிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நகர்ப்புறப் பகுதிகளில் இது 15 சதவீதமாக இருக்கும். தாழ்த்தப்பட்ட/பழங்குடியின வகுப்பு/ பெண்கள் போன்ற சிறப்புப் பிரிவுப் பயனாளிகள், ஊரகப்பகுதிகளில் 35 சதவீதம், நகர்ப்புறப் பகுதிகளில் 25 சதவீதம் என விடுமிகு தொகை மானிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த வெபினாரை வழங்கியவர்கள், சிறு வர்த்தகத்துக்கான எம்எஸ்எம்இ பதிவுப் பயன்கள் பற்றியும் விளக்கினர்.


(रिलीज़ आईडी: 1647893) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Gujarati