ரெயில்வே அமைச்சகம்
தில்லி அருகமைப் பகுதிகளில் ரயில் கட்டமைப்புகளை அதிகரித்தது ரயில்வே .
प्रविष्टि तिथि:
21 AUG 2020 7:36PM by PIB Chennai
ரயில்வே கட்டமைப்புகளை அதிகரித்து, நகர்ப்புற அடர்த்தியைக் குறைப்பதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடக்கு ரயில்வே ஏற்கனவே உள்ள ரோத்தக் - கோகனா ரயில் பாதையின் 4.8 கி.மீ. தூரப் பாதையை மேம்பாலமாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. அடுத்த மூன்று மாதங்களில் இது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
இந்த ரயில் பாதை தில்லி நகரத்தின் இதயப்பகுதின் ஊடே செல்கிறது. நகர அளவுக்குள் நான்கு லெவல் கிராசிங்குகள் உள்ளன. இந்த கேட்டுகள் அடிக்கடி மூடப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி இப்பகுதியில் மெதுவாக செல்வதால், ரயில் போக்குவரத்தையும் பெரிதும் பாதிப்பதுடன், சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
தற்போது பாலத்தின் மேலே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், லெவல் கிரலாசிங்குகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், ரோத்தக் மக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இந்தப்பாதை திறக்கப்படும் போது, இந்த முக்கியமான தடத்தில் ரயில்களை சுமுகமாக ரயில்வேயால் இயக்க முடியும். இந்தப் பாதையில் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படும்.
இந்த திட்டப்பணிகளை ரயில்வேயும், அரியானா மாநில அரசும் சேர்ந்து, மொத்தம் ரூ.315 கோடியில் மேற்கொண்டுள்ளன. இதில் மாநில அரசின் பங்கு ரூ.225 கோடி. இதன் மூலம் ரோத்தக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
*****
(रिलीज़ आईडी: 1647779)
आगंतुक पटल : 185