குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி பெயரை மோசடியாகp பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ்.

Posted On: 21 AUG 2020 3:46PM by PIB Chennai

காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் காதி எசன்சியல்ஸ் , காதி குளோபல் என்னும் இரண்டு நிறுவனங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுவணிக முத்திரை பெயரானகாதி’’ யை அதிகாரபூர்வமற்ற முறையிலும், மோசடியாகவும் பயன்படுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு -வர்த்தகth தளங்கள் மூலம் காதி என்னும் வணிக முத்திரையைப் பயன்படுத்தி ஒப்பனை மற்றும் அழகுசாதனப் பொருள்களை விற்பதில் இரண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “காதி ‘’ என்னும் வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் பொருள்களை விற்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், www.khadiessentials.com, www.khadiglobalstore.com என்ற  தங்கள் வலைதளங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேவிஐசி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கையாளும், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்டரெஸ்ட் போன்ற சமூக ஊடகக் கணக்குகளை இந்த இரண்டு நிறுவனங்களும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

காதி வணிக முத்திரைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், உங்கள் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது, அதைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்வது தீய நம்பிக்கையை உருவாக்குவதாகும். “காதி” என்னும் வணிக முத்திரையை அதிகாரபூர்வ, அங்கிகரிக்கப்பட்ட உரிமதாரர்கள் மட்டுமே பயன்படுத்தலாம்”என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. “இந்தப் பெயரைப் பயன்படுத்தி , அதேபோன்ற பொருள்களை விற்பனை செய்வது, கேவிஐசியின் வணிக முத்திரையின் நற்பெயரைக் குலைப்பதுடன், சந்தையில் குழப்பத்துக்கும் , ஏமாற்றுதலுக்கும் சந்தேகமின்றி வழிவகுக்கும்நீங்கள் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது ‘’ காதி’’ வணிகமுத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவதும், சித்தரிப்பதும் ஆகும் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

‘’ காதி’’ என்னும் பெயரைப் பயன்படுத்தி பொருள்களை விற்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், காதி எசன்சியல்ஸ் மற்றும் காதி குளோபல் பெயரைக் கொண்ட பொருள்கள், லேபிள்கள், விளம்பரப் பொருள்கள், விளம்பரப் பலகைகள், இதர வணிக ரசீதுகள், சீட்டுகள் ஆகியவற்றை இரு நிறுவனங்களும் அழிக்க வேண்டும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளன. ஏழு நாட்களுக்குள் இதனை நிறைவேற்றத் தவறினால், இந்த நிறுவனங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1647666) Visitor Counter : 166