அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஊரகப்பகுதிகளில் அதிகப் பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படாத சூழ்நிலைகளில் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய, குறைந்த செலவிலான கோவிட்-19ஐ கண்டறியும் கருவியை உருவாக்க ஆய்வுகள் தொடங்கியுள்ளன

Posted On: 21 AUG 2020 12:29PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் விரைவுப் பரிசோதனை வசதிகளை உருவாக்க வேண்டிய புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.  கட்டாயமான சேமிப்பு வசதிகள் அதிகம் தேவைப்படாத நிலையில், குறைந்த செலவிலான பரிசோதனைக் கருவிகளை உருவாக்க வேண்டிய தேவையை இது எழுப்பியுள்ளது.  இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஆராய்ச்சித் திட்டத்தை விஞ்ஞானிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (SERB), ஆதரவுடன் ராஞ்சியின் மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிலையம் உயிர் தகவலியல் கருவியைப் பயன்படுத்தி இலக்குப் புரதத்தை கண்டறியும் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.  இதற்கான பரிசோதனைக் கருவியை உருவாக்கும் முயற்சியில் இந்த நிலையம் ஈடுபட்டுள்ளது.  பரிசோதனைக் கருவியை உருவாக்குவதற்காக ஸ்பைக் புரதச் சிறப்பு தொகுதியை இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ஆராய்ச்சியார்கள் சார்ஸ்-கொரோனா-வைரஸ்2 தொற்றைக் கண்டறிவதற்கான அப்டாமர் அடிப்படையிலான பரிசோதனைக் கருவியை உருவாக்கி வருகின்றனர்.  இந்த ஆய்வானது கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதை முதலில் உறுதி செய்யும்.  இந்தப் பரிசோதனைக் கருவி கோவிட்-19 தொற்று உள்ளிட்ட பல்வேறு வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்களை (சார்ஸ்-கொரோனா-வைரஸ்1, மெர்ஸ்) வித்தியாசப்படுத்திக் கண்டறியும்.  இந்த மூன்று கொரோனா வைரஸ் தொற்றிலும் (சார்ஸ் கொரோனா-வைரஸ்1, மெர்ஸ் & கோவிட்-19) உள்ள கன்சர்வ்டு டொமைன் அடிப்படையில் பொதுவான கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படும். அதே வேளையில் வைரசை வித்தியாசப்படுத்திக் கண்டறியும் உபகரணமானது சார்ஸ்-கொரோனா-வைரஸ்2, சார்ஸ்-கொரோனா-வைரஸ்1, மெர்ஸ் வைரஸ் ஆகியவற்றில் முறையே உள்ளடங்கியுள்ள கன்சர்வ்டு மற்றும் நான்கன்சர்வ்டு டொமைன் அடிப்படையில் உருவாக்கப்படும். 



(Release ID: 1647665) Visitor Counter : 188