பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரபல புற்றுநோய் நிபுணர் டாக்டர் அசோக் வைத் தொகுத்த புற்றுநோய் குறித்த புத்தகத்தை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மெய்நிகர் நிகழ்வில் வெளியிட்டார்

Posted On: 20 AUG 2020 8:17PM by PIB Chennai

பிரபல புற்றுநோயியல் நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் அசோக் கே. வைத் டிஎம் (புற்றுநோயியல்) தொகுத்த புற்றுநோய் குறித்த புத்தகத்தை, மத்திய அமைச்சரும், நீரிழிவு நோயியல் நிபுணரும்,  மருத்துவ வல்லுனருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட புற்றுநோய் குறித்த மூன்று நாள் மெய்நிகர் மாநாட்டின் சிறப்பு அமர்வில் இன்று வெளியிட்டார்.

இந்தியாவில் வானவில் போன்று மாறிவரும் நோயின் தன்மை குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கரோனரி இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கோளாறுகளின் எழுச்சியால் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொற்று நோய்களில் இருந்து தொற்றா நோய்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கிடையில் நாம் திடீரென கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்கு உட்படுதப்பட்டோம்; இந்த நோய் தொற்று, நாட்பட்ட கோளாறுகள் மற்றும் நோய்களால் அவதிப்படும் தனி நபர்களை எளிதில் பாதிக்ககூடிய மிகக்கடுமையான நோய் என்பது நிரூபனமாகி உள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நாடு முழுவதும் புற்றுநோயின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், பல்வேறு உடல் உறுப்புகளை பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். உதாரணமாக, ஜம்மு-காஷ்மீரில், குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில், இரைப்பை குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் தற்போது பரவலாகக் காணப்படுதாகவும்,. வடகிழக்கு பிராந்தியத்தில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

*****



(Release ID: 1647572) Visitor Counter : 158