தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் தகவல் பிரிவுக்கான லோகோவை அறிமுகம் செய்து வைத்தார் திரு. சந்தோஷ் கங்க்வார் - கொள்கை ஆக்கம் செய்வதில் தகவல் அடித்தளம் மிக முக்கியம் எனக் கருத்து

Posted On: 20 AUG 2020 2:52PM by PIB Chennai

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் தகவல் பிரிவுத் துறைக்கான லோகோவை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. சந்தோஷ்குமார் கங்க்வார் ஷ்ரம் சக்தி பவனில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். அத் துறையின் செயலாளர் திரு ஹீராலால் சமாரியா, தொழிலாளர் தகவல் பிரிவின் தலைமை இயக்குநர் திரு. டி.பி.எஸ். நெகி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  தகவல் பிரிவின் லட்சிய நோக்கு குறித்துக் காட்சி ரீதியில் விளக்கும் வகையில் இந்த லோகோ அமைந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு குறித்த ஆய்வுக்காக 1941இல் சிம்லாவில் இந்தத் தொழிலாளர் தகவல் பிரிவு தொடங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் முக்கியமான மையங்களில் வாழ்க்கைச் செலவுக் குறியீடுகள் குறித்த தகவல்களை சேகரித்தல், குடும்பச் செலவு பற்றிய விவரங்கள் சேகரித்தல் ஆகியவை இந்தப் பிரிவின் நோக்கங்களாக உள்ளன. இந்தத் தகவல் சேகரிப்பு சீரான அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.தொழிலாளர் கொள்கை உருவாக்கப்பட்ட சூழ்நிலையில், விரிவான தொழிலாளர் புள்ளிவிவரங்களின் தேவை அதிகரித்த நிலையில், வாழ்க்கைச்செலவு இயக்குநரகம் 1946 அக்டோபர் 1 ஆம் தேதி தொழிலாளர் தகவல் பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதிருந்து அகில இந்திய அளவில் தொழிலாளர்களின் பல்வேறு நிலைகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியில் தெரிவித்தல் ஆகிய பணிகளில் இந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது.

செயல்முறைகளை முழுக்க டிஜிட்டல் மயமாக்கி, தகவல் தொகுப்புப் பகுப்பாய்வுகள் செய்து, தினசரி செயல்பாடுகளில் செயற்கைப் புலனறிதல் அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தொழிலாளர்களை அடையும் சூழலை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர்கள் மற்றும் வேலை தொடர்பான தகவல்களைக் கையாளும் பணியில் தொழிலாளர் தகவல் பிரிவு செயல்படுகிறது என்பதை அடையாளப்படுத்துவதாக, புதிய லோகோ அமைந்துள்ளது. தரமான தகவல் தொகுப்பை உருவாக்குவதில் - துல்லியத்தன்மை, செல்லத்தக்க நிலை மற்றும் நம்பகத்தன்மை - என்ற மூன்று இலக்குகளை அடையாளப் படுத்துவதாகவும் இது இருக்கிறது.



(Release ID: 1647511) Visitor Counter : 235