அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோய்க்கான நடமாடும் மருத்துவமனைக் கட்டமைப்பை எஸ்சிடிஐஎம்எஸ்டி மற்றும் சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது

Posted On: 19 AUG 2020 5:14PM by PIB Chennai

சுகாதாரக் கட்டமைப்பு முறையை குறிப்பாக ஊரகப்பகுதிகளில் அமைக்க வேண்டிய அவசியத்தை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 நோயைக் கண்டறிந்து, சோதனை மேற்கொண்டு, நோயாளிகளைத் தனிமைப்படுத்த, உள்ளூர் சமுதாயத்தில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய போர்ட்டபிள் மருத்துவமனை, அதிகரித்துவரும் சுகாதாரக் கட்டமைப்புத் தேவைக்குத் தீர்வாக அமையும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி நிறுவனமான, ஶ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology - SCTIMST), ஐஐடி சென்னை உதவியுடனான ஸ்டார்ட் அப் நிறுவனமான மாடுலஸ் ஹவுசிங் உடன் கூட்டாகச் சேர்ந்து ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. எளிதில் எடுத்துச் செல்லகூடிய நுண்அமைப்புகள் மூலம், கோவிட்-19 நோயை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கான பரவலான அணுகுமுறை இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஶ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தச் சேர்ந்த விஞ்ஞானிகள் திரு.சுபாஷ் என்என், திரு. முரளிதரன் சிவி ஆகியோர், மாடுலஸ் ஹவுசிங் தலைமை செயல் அதிகாரி திரு. ஶ்ரீ:ரன் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உதவியாளர்களுடன் சேர்ந்து மெடிகேப் என்ற எளிதில் எடுத்துச் செல்லகூடிய நுண்அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது, நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப சிறந்த, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய, நீடித்த, எளிதில் அமைக்கக் கூடியதாகும்.  ஒரு மருத்துவரின் அறை, தனிமைப்படுத்தும் அறை, மருத்துவ அறை/வார்டு, இரண்டு படுக்கை தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்தக் கட்டமைப்பு எதிர்மறை அழுத்தத்தில் பராமரிக்கக்கூடிய, மடித்து எடுத்துச் செல்லக்கூடியதாகும். எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த அமைப்பை எங்கு வேண்டுமானாலும், நான்கு பேரின் உதவியுடன், இரண்டு மணி நேரத்தில் அமைக்கலாம். மெடிகேப் கேபின்கள் இறுக்கமாக சீலிடப்பட்டிருக்கும். இது தூசு படியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், உள்ளேயே அமைக்கப்பட்ட பிளக் மின்சாதனங்கள் உள்ளன. எந்தவித வானிலையிலும், பலத்த மழையிலும் இது தாக்குப் பிடிக்கக் கூடியதாகும்.

முன்புனைப்பு மாடுலர் தொழில்நுட்பத்துடனும், தொலைநோக்கி சட்டத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு, அதன் அளவை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கி மடக்கக்கூடியது. இதனால், இதை பத்திரப்படுத்துவதும், கொண்டு செல்வதும் எளிது. இந்த போர்ட்டபிள் மாதிரி, 200, 400,800 சதுர அடி பரப்பில், மூன்று அளவுகளில் கிடைக்கும். கிடைக்கும் இடத்தைப் பொறுத்து, கார் நிறுத்தும் இடங்களிலோ, மருத்துவமனை மேல்மாடியிலோ இதை அமைக்கலாம்.

தற்போது வரை, 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையை அடுத்த செங்கல்பட்டில், சுகாதாரத் தனியார் நிறுவனத்தில் ரூ.34 லட்சம் செலவிலும், கேரள மாநிலம் வயநாட்டில், வரதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 படுக்கை மருத்துவமனை ரூ.16 லட்சத்திலும் அரசு தரப்பிலும் வெற்றிகரமாக நான்கு மண்டல மருத்துவமனைகளாக நிறுவப்பட்டுள்ளன.

இரட்டை வடிவமைப்பில் செயல்படும் இந்த நடமாடும் மருத்துவமனைகள் கோவிட்-19 தனிமை வார்டுகளாக விரைந்து தொடங்கப்படலாம் என்று மாடுலஸ் ஹவுசிங் குழு தெரிவித்துள்ளது. எல் அண்ட் டி, டாடா குழுமம், சபூர்ஜி, செல்கோ போன்ற பெருமை மிகு வாடிக்கையாளர்களைக் கொண்ட மாடுலஸ் ஹவுசிங் , வெள்ள சமயத்தில் அவசர கால ஹவுசிங் தீர்வுகளை அளித்துள்ளது. இந்த முயற்சியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது சமூக ஊடகத் தளங்களில் பாராட்டியுள்ளது.



(Release ID: 1647197) Visitor Counter : 265