ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

திரு மண்டவியா நாட்டில் உரங்கள் கிடைப்பது குறித்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினார்; பற்றாக்குறை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

प्रविष्टि तिथि: 18 AUG 2020 6:41PM by PIB Chennai

மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று மாநில வேளாண் அமைச்சர்கள், உரங்கள் துறை மற்றும் வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைய சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.

சந்திப்பில் உரையாற்றிய திரு மண்டவியா, நாட்டில் உரங்களுக்கு தட்டுப்பாடில்லை என்று தெரிவித்தார். து விவசாயிகள் சமூகத்திற்கு போதுமான அளவில் கிடைக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

நாடு முழுவதும் உரங்களை சீராக வழங்குவதற்காக மாநில நிர்வாகங்களின் அனைத்து அதிகாரிகளுடனும் நிகழ்நேர ஒருங்கிணைப்புக்கு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சில மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் இணையம் மூலம் சந்திப்பில் பங்கேற்றனர். இராசயனங்கள் துறையின் செயலாளர் சாபிலேந்திர ரூல் இணைச் செயலாளர் மற்றும் துறையின் மற்ற மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

****


(रिलीज़ आईडी: 1646837) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Telugu