மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐ.ஐ.எம் ராய்ப்பூரின் 11 வது தொகுதி முதுகலைத் திட்டத்தின் தொடக்கத் திட்டத்திலும், 9 வது தொகுதி சக (முனைவர்) திட்டத்திலும் மத்திய கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.

Posted On: 18 AUG 2020 6:19PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' 11 வது தொகுதி முதுகலைப் பட்டதாரி திட்டம் (PGB) மற்றும் ஐஐஎம் ராய்ப்பூரின் 9 வது தொகுதி சக (Doctoral) திட்டம் (FBM) இணைய ஊடகம் மூலம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஐ.ஐ.எம் ராய்ப்பூரின் நிர்வாகக் குழுவின் தலைவர் திரு. சியாமல் கோபிநாத் மற்றும் ஐ.ஐ.எம் இயக்குநர் பேராசிரியர் பாரத் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. போக்ரியால், 11 வது தொகுதி முதுகலைப் பட்டதாரித் திட்டம் (PGB) மற்றும் ஐஐஎம் ராய்ப்பூரின் 9 வது தொகுதி சக (Doctoral) திட்ட மாணவர்களை ஐஐஎம் வளாகத்திற்கு வரவேற்றார். வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் மேம்பாடு, சமூகத்துடன் நேர்மறையான ஈடுபாடு மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பது ஆகியவற்றுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்; அவை நமது சமூகத்தையும், நாட்டையும் சாதகமாக பாதிக்கும் குணங்கள் என்று தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையும் (NEP, 2020) இந்த திசையில் ஒரு படி என்று திரு. போக்ரியால் குறிப்பிட்டார். கல்வியின் பாடத்திட்ட மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் நமது தேசத்தை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்றலின் அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பை இது வலியுறுத்துகிறது. 2035ஆம் ஆண்டில் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் எவ்வாறு விரும்புகிறது என்பதை விளக்கினார், அப்போது ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களும் இந்த சந்தர்ப்பத்திற்கு உயருவதுடன், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கொள்கை நோக்கங்களை அடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.ங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்க மாணவர்களை வாழ்த்தியதோடு, நாட்டுக்கு உற்சாகத் துடிப்பு தேவைப்படுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வு தேவை. அவர்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், எந்த விதமான விஷயமாக இருந்தாலும் அதை நோக்கி செயல்படுவார்கள் என்று உறுதியளித்ததோடு அவர் தனது உரையை முடித்தார்.

*********



(Release ID: 1646835) Visitor Counter : 170