மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதுமையில் சாதனை என்பதற்கான அடல் தரவரிசை ஏ ஆர் ஐ ஐ ஏ 2020 அமைப்புகளின் தேர்வு முடிவுகளை நாளை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிடுகிறார்
Posted On:
17 AUG 2020 4:44PM by PIB Chennai
புதுமையில் சாதனை என்பதற்கான அடல் தரவரிசை அமைப்புகளின் முடிவுகளை (Atal Ranking of Institutions on Innovation Achievements – ARIIA 2020) நாளை 18 ஆகஸ்ட் 2020 அன்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அறிவிக்கிறார். அறிவிப்பு விழாவில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்; மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு.சஞ்சய் ஷாம் ராவ் தோத்ரே ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த மெய்நிகர் விழாவில், உயர் கல்வித்துறைச் செயலர் திரு.அமித் காரே; அரசுத்துறை, அரசு சாரா அமைப்புகள், உயர்கல்வி அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.
அடல் தரவரிசை தர நிர்ணயம், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் முயற்சியாகும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) மற்றும் மத்திய அரசின் அமைச்சகத்தின் புதுமைப் பிரிவும் இணைந்து இதனைச் செயல்படுத்துகின்றன இந்தியாவிலுள்ள கல்வி அமைப்புகளையும் பல்கலைக்கழகங்களையும் புதுமை; ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே புதிதாகத் தொழில் தொடங்குவோரை ஊக்குவித்தல், தொழில்முனைவோர் மேம்பாடு ஆகிய குறியீட்டு அம்சங்களின் அடிப்படையில், உயர்கல்வி அமைப்புகள் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.
(Release ID: 1646601)
Visitor Counter : 189