எரிசக்தி அமைச்சகம்

என்டிபிசி நிறுவனம் சாம்பல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு வசதியை ரிஹாண்டில் வடிவமைத்துள்ளது

Posted On: 16 AUG 2020 1:51PM by PIB Chennai

நாட்டில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமும், மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமுமான என்டிபிசி நிறுவனம் உத்தரப் பிரதேசத்திலுள்ள ரிஹாண்ட் திட்டத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு, குறைந்த செலவில் சாம்பலை, அதிக அளவில் எடுத்துச் செல்வதற்காக கட்டமைப்பு வசதி ஒன்றைத் தயாரித்துள்ளது. மின்உற்பத்தி ஆலைகளில் இருந்து சாம்பலை நூறு சதவிகிதம் பயன்படுத்துவதற்கான என்டிபிசியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

முதல் கட்டமாக 3450 மெட்ரிக் டன் கொண்ட சாம்பலை ஏற்றிக்கொண்டு 59 பிஓ எக்ஸ் என் ரக ரயில்வே வாகன்கள் என்டிபிசி நிறுவனத்தின் ரிஹாண்ட் சூப்பர் அனல் மின் நிலையத்திலிருந்து உத்தரபிரதேசத்தில் திகாரியாவில் உள்ள ஏசிசி சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டது. இந்த ஆலை 458 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வாகன்களை என்டிபிசி ரிஹாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் திரு.பாலாஜி ஐயங்கார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். என்டிபிசி ரிஹாண்ட்டின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

 

தொலைதூரத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள சாம்பல், நுகர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவது புதிய சகாப்தத்தை துவக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. குறைந்த விலையில், சுற்றுச்சூழலுடன் இணக்கமான முறையில், சிமெண்ட் ஆலைகளுக்கு சாம்பல் கிடைப்பது; இந்திய ரயில்வே துறைக்கு கூடுதலான சரக்கு ஏற்றும் வழிகள் கிடைப்பதால் சாம்பல் பயன்பாட்டை அதிகரிப்பது; ஆகியவற்றுக்கு இந்த முயற்சி பெரிதும் உதவும். 2019- 20 ஆம் நிதியாண்டில் பல்வேறு உற்பத்தி நோக்கங்களுக்காக 44.33 மில்லியன் டன் சாம்பல் பயன்படுத்தப்பட்டது. சாம்பலின் மொத்த உற்பத்தியில் இது 73.31 சதவிகிதமாகும்.

 

என்டிபிசி குழுமத்திற்கு 70 மின் நிலையங்கள் உள்ளன. இவற்றுள் 24 நிலக்கரி; 7 வாயு, திரவ எரிபொருள் தொகுப்பு; ஒரு நீர்மின் நிலையம்; பதிமூன்று புதுப்பிக்கக்கூடிய நிலையங்கள்; 25 துணை மின் நிலையங்கள் மற்றும் கூட்டு முயற்சி மின்நிலையங்கள் ஆகும். மொத்தத் திறன் 22.9 ஜி டபிள்யூ. தற்போது 20 ஜீ டபிள்யூ திறன்கொண்ட நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுள் ஐந்து ஜீ டபிள்யூ புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள் மூலமாக கிடைக்கப்பெறும்.

 

என்டிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 

***



(Release ID: 1646368) Visitor Counter : 172