விவசாயத்துறை அமைச்சகம்

கடந்த ஆண்டோடு ஒப்பிட மொத்த காரீஃப் விதைப்பு பரப்பளவு 8.54 சதவீத அளவு அதிகரித்து உள்ளது

Posted On: 14 AUG 2020 6:05PM by PIB Chennai

காரீஃப் பருவத்தில் பயிரிடுவதற்கான விதைப்புப் பரப்பளவு திருப்திகரமான அளவில் அதிகரித்து வந்துள்ளது.  14.8.2020 அன்றுள்ளபடி, மொத்த காரீஃப் பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு 1015.58 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 935.70 லட்சம் ஹெக்டேராக இருந்ததுஒப்பீட்டளவில் பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிரிடும் பரப்பளவு நாட்டில் 8.54 சதவீதம் அதிகரித்துள்ளதுபயிர் வாரியாக விதைப்பு நிலப்பரப்பு கீழே தரப்படுகிறது:

நெல்: சுமார் 351.86 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதுகடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 308.51 லட்சம் ஹெக்டேர் நிலத்தில்தான் நெல் பயிரிடப்பட்டு இருந்தது.  அதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 43.35 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

பருப்புகள்: சுமார் 124.01 லட்சம் ஹெக்டேரில் பருப்புகள் பயிரிடப்பட்டுள்ளனகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 121.50 லட்சம் ஹெக்டேரில் தான் பருப்புகள் பயிரிடப்பட்டு இருந்தனஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 2.51 லட்சம் ஹெக்டேரில் பருப்புகள் பயிரிடப்பட்டுள்ளன.

சிறு தானியங்கள்: சுமார் 168.12 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளனகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 162.28 லட்சம் ஹெக்டேரில்தான் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு இருந்தனஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 5.84 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

எண்ணெய் வித்துக்கள்: சுமார் 187.14 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளனகடந்த அண்டு இதே காலப்பிரிவில் 163.57 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டு இருந்தனஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 23.56 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

கரும்புஇந்த ஆண்டு சுமார் 52.02 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதுகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 51.40 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தான் கரும்பு பயிரிடப்பட்டு இருந்ததுஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 0.62 லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.

சணல் மற்றும் புளிச்சக்கீரை: இந்த ஆண்டு சுமார் 6.96 லட்சம் ஹெக்டேரில் சணல் மற்றும் புளிச்சக்கீரை பயிரிடப்பட்டுள்ளதுகடந்த ஆண்டு இதே காலப்பிரிவில் 6.85 லட்சம் ஹெக்டேரில்தான் இவை பயிரிடப்பட்டு இருந்தனஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 0.11 லட்சம் ஹெக்டேரில் இவை பயிரிடப்பட்டுள்ளன.

பருத்தி: இந்த ஆண்டு சுமார் 125.48 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளதுகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 121.58 லட்சம் ஹெக்டேர் பரப்பில்தான் பருத்தி பயிரிடப்பட்டு இருந்ததுஅதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிட இந்த ஆண்டு கூடுதலாக 3.90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் சேமிப்பு அளவு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட 88 சதவீதம் உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.(Release ID: 1646184) Visitor Counter : 185