ஆயுஷ்

ஆயுஷ் அமைச்சகம் தொடங்கிய ‘நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’ பிரச்சாரத்துக்கு டிஜிடல் வெளியில் உற்சாகமான வரவேற்பு

Posted On: 14 AUG 2020 5:04PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகம் , ‘’ நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’’ என்னும் மூன்று மாத கால பிரச்சாரத்தை  இணையத்தின் வழியாக இன்று தொடங்கியுள்ளது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆன்மீக குரு ஶ்ரீ ஶ்ரீவிசங்கர் சிறப்புரையாற்றினார்ஆயுஷ் தீர்வுகள் உலகம் முழுவதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அமைச்சகத்தின் புதிய தகவல் தொடர்பு தளமான, ஆயுஷ் மெய்நிகர் மாநாட்டு மையத்தில் இது நடைபெற்றது. ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரபூர்வ முகநூல் தளத்தில் இது நேரடியாக ஒளிபரப்பானது. இதன் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 60,000 ஆகும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் திரு. வைத்யா ராஜேஷ் கொடேச்சா, நடிகர் திரு. மிலிந்த் சோமன், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் கீதா கிருஷ்ணன், ஏஐஐஏ இயக்குநர் பேராசிரியர் தனுஜா நேசரி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.

குருதேவ் ஶ்ரீஶ்ரீவிசங்கர், தற்போதைய சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என கூறினார். ஆயுர்வேதம் மற்றும் இதர ஆயுஷ் நடைமுறைகளின் காரணமாக வாழ்க்கை ஆதாரத்தை அதிகரிப்பது பற்றி அவர் விளக்கினார். ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கொடேச்சா, இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து பற்றி விளக்கினார். ஆயுஷ் தீர்வுகள் மூலம், அனைவருக்கும் குறைந்த செலவிலான , அணுகும் வகையிலான சுகாதாரத்தை அளிப்பது  அக்கருத்து என அவர் குறிப்பிட்டார். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு, மக்களிடையே பழக்க, வழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதில் பாரம்பரிய மருத்துவ முறைகள் , சிகிச்சை முறைகள் ஆக்கபூர்வமான பயன்களை அளித்துள்ளதற்கான ஆதாரங்களை அவர் விளக்கினார்.  ‘’நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ்’’ என்ற குடையின் கீழ், பிரச்சாரத்தை முன்னெடுப்பது தொடர்பான  அமைச்சகத்தின் திட்டம் பற்றியும் அவர் மேலும் விளக்கினார்.



(Release ID: 1645967) Visitor Counter : 174