பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வலைதளம் “ஸ்வஸ்த்யா’’வை மின்னணு முறை மூலம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார்.
Posted On:
14 AUG 2020 6:05PM by PIB Chennai
மத்தியப் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா “ஸ்வத்ஸ்யா’’ என்னும் பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த முதலாவது வலைதளத்தை வரும் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் பழங்குடியின மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விசயங்களுக்கு தீர்வு அளிக்கும் ஒற்றை இடமாக இது இருக்கும். இத்துறையின் இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருத்தாவும் இதில் கலந்து கொள்கிறார். பழங்குடியின விவகார அமைச்சகம், பிரமல்ஸ்வத்ஸ்யா என்னும் செயல்திறன் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளது. பழங்குடியின மக்கள் தொடர்பான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அனைத்து விவரங்களும் இதில் கிடைக்கும்.
இந்தியப் பழங்குடியின மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விரிவான தளமாக “ஸ்வத்ஸ்யா’’ இருக்கும். இந்த வகையில் முதலாவதான இத்தளத்தில், ஒரு டாஷ்போர்டு, அறிவுக் களஞ்சியம், பங்குதாரர் பிரிவு, சிக்கிள் செல் நோய்கள் ஆதரவு முனை ஆகியவை இருக்கும். கண்டறியப்பட்ட 117 உயர் முன்னுரிமைப் பழங்குடியின மாவட்டங்களுக்கான, பல்வேறு ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவுகளை இந்த டாஷ்போர்டு அளிக்கும். இத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகள், பழங்குடியின சமுதாயத்தின் சிறந்த நடைமுறைகள், புதுமையான பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இத்தளத்தில் கிடைக்கும். இத்தளத்தில் உள்ள சிக்கிள் செல் நோய்கள் ஆதரவு முனை, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பதிவுசெய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. தற்போதுள்ள அறிவு மற்றும் ஆதார அடிப்படையிலான கொள்கை ஆகியவற்றுக்கு இடையே பாலமாக இது திகழும். இதனால், இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும்.
இந்த வலைதளத்தை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவு மேலாண்மைக்கான சென்டர் ஆப் எக்சலென்ஸ் நிர்வகிக்கும். இது பழங்குடியின அமைச்சகத்தால், பிரமல்ஸ்வத்ஸ்யா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டது. இந்த சிஓஇ அமைப்பு, பழங்குடியினருக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தரவுகளை ஒருங்கிணைக்கிறது. ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பதை ஊக்குவிக்கிறது. வெற்றிகரமான மாதிரிகள், சிறந்த நடைமுறைகள், புதுமையான தீர்வுகள், அறிவுப் பகிர்வை பரப்புதல், கட்டமைப்புகளை உருவாக்குதல், அனைத்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஒத்துழைப்பு பழங்குடியினர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விஷயங்களை முன்னேற்றுதல் ஆகியவற்றை ஆவணப்படுத்தும்.
*****
(Release ID: 1645959)
Visitor Counter : 246