சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

நஷமுக்த் இந்தியா இயக்கத்தில் ஈடுபட்டுள்ள 272 மாவட்ட ஆட்சியாளர்கள்,31 மாநிலச் செயலாளர்கள் ஆகியோரிடையே இணையவழிக் கருத்தரங்கு மூலமாக திரு.தாவர் சந்த் கெலாட் உரையாற்றினார்.

Posted On: 14 AUG 2020 6:34PM by PIB Chennai

272 மாவட்ட ஆட்சியாளர்கள், 31 மாநிலச் செயலாளர்கள் 500க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், விஓக்கள், போதை தடுப்புக்கான நார்காடிக் கண்ட்ரோல் பியூரோ, மருத்துவர்கள், என் டி டி டி சி நிபுணர்கள், எய்ம்ஸ் நிபுணர்கள், ஷமுக்த் இந்தியா இயக்கத்துடன் தொடர்புடைய மாநில, மாவட்ட அதிகாரிகள் ஆகியோரிடையே என் ஐ சி மூலமாக நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் மத்திய சமூகநீதி, அதிகாரம் துறைக்கான மத்திய அமைச்சர் திரு.தாவர் சந்த் கெலாட் பேசினார். இந்த இயக்கத்திற்குக் கணிசமான உத்வேகம் அளிப்பதற்காக இந்த இணைய வழிக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இயக்கம் தொடர்பான நான்கு சுவரொட்டிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். சமூகநீதி அதிகாரத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் கள் திரு.கிருஷன் பால் குர்ஜார், திரு.ராம்தாஸ் அத்வாலே, திரு.ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். சமூகநீதி அதிகாரம் அமைச்சகத்தின் செயலர் திரு.சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். மத்திய சமூகநீதி அதிகாரம் அமைச்சகத்தின் இணைச்செயலர் திருமதி.ராதிகா சக்கரவர்த்தி, ஷமுக்த் இந்தியா இயக்கம் பற்றி , இயக்கக் காலத்தின் போது மேற்கொள்ளப்படவுள்ள செயல்பாடுகள், வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001V2SQ.jpg

 

போதை மருந்துப் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்தும் மாவட்டங்களாகக் கண்டறியப்பட்டுள்ள 272 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வகையில் ஷமுக்த் இந்தியா இயக்கம், மத்திய சமூகநீதி அதிகாரம் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் திரு.தாவர் சந்த் கெலாட் கூறினார். ஷமுக்த் இந்தியா இயக்கத்தை, மாநில அரசுகளும், 272 மாவட்ட ஆட்சியாளர்களும், 15 ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கி வைப்பார்கள். இந்த இயக்கம் ஏழு மாதகாலத்துக்கு31 மார்ச் 2021 வரை நடைபெறும். மாவட்ட, மாநில அளவிலான ஷமுக்த் இந்தியா குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், இந்த இயக்கத்திற்கான உத்திகளையும், செயல்திட்டங்களையும் வகுக்கும். இயக்கத்தின் செயல்பாடுகள், பயனுள்ள முறையில் செயல்படுத்தப் படுவதையும், இயக்கத்தின் நோக்கங்கள் எட்டப்படுவதையும், இந்தக் குழுக்கள் உறுதிப்படுத்தும். நார்காட்டிக்ஸ் கண்ட்ரோல் பியூரோவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், தேசிய அளவில் அமைச்சகம் நடத்திய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 272 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஷமுக்த் இந்தியா இயக்கத்தைச் செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்காக 2017ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த 43 கோடி ரூபாய் 2020 ஆம் ஆண்டில் 260 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு ஒதுக்கீட்டுத் தொகை 5 மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அரசு இந்த இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார். என் ஏ பி டி டி ஆர் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக மாநில அரசுகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002V1XX.jpg

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 272 மாவட்டங்களுக்கு இந்த இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்நார்காட்டிக்ஸ் கண்ட்ரோல் பியூரோ; சமூகநீதி மூலமாக அனைவரையும் சென்றடைதல் / விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; சுகாதாரத்துறை மூலமாக சிகிச்சை அளித்தல் ஆகிய மூன்று வழிகளில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.

 

இயக்கத்தின் பல்வேறு பகுதிகள் பின்வருமாறு:

 

  • விழிப்புணர்வு உருவாக்கும் திட்டங்கள்
  • உயர்கல்வி அமைப்புகள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்
  • சமுதாயத்தைச் சென்றடைதல்; சார்ந்திருக்கும் மக்களைக் கண்டறிதல்
  • மருத்துவமனை அமைப்புகளில் உள்ள சிகிச்சைக்கான வசதிகளில் கவனம் செலுத்துதல்
  • சேவை அளிப்பவர்களுக்கு திறன் வளர்ப்பு திட்டங்கள் அளித்தல்

(Release ID: 1645938)