ஜல்சக்தி அமைச்சகம்

நாட்டின் 123 நீர்த்தேக்கங்களில் கிடைக்கக்கூடிய நேரடி சேமிப்பு 13.08.2020 நிலவரப்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பில் 88%; கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த நேரடி சேமிப்பில் சராசரியாக 98%

Posted On: 13 AUG 2020 6:57PM by PIB Chennai

மத்திய நீர்வள ஆணையம், நாட்டின்  123 நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்பு நிலவரம் குறித்து வாரந்தோறும் கண்காணித்து வருகிறது. இந்த நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 60 மெகாவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்டதாக நிறுவப்பட்ட நீர் மின் சக்திகளின் நன்மைகளைக்   கொண்டுள்ளன. இந்த 123 நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி சேமிப்புத் திறன். 171.090 பில்லியன் கியூபிக் மீட்டர் (பி.சி.எம்) ஆகும், இது 257.812 பி.சி.எம்மின் நேரடி சேமிப்புத் திறனில் 66.36% ஆகும். இது நாட்டில் உருவாக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. . 13.08.2020 தேதியிட்ட நீர்த்தேக்க சேமிப்பு அறிக்கையின்படி, இந்த நீர்த்தேக்கங்களில் கிடைக்கும் நேரடி சேமிப்பு 92.916 பி.சி.எம் ஆகும். இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி சேமிப்பு திறனில் 54% ஆகும்.

 

தெற்கு பிராந்தியத்தில் ஆந்திரா, தெலங்கானா  (ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த இரு திட்டங்கள்) கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடங்கும். மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பில் வரும் 36 நீர் தேக்கங்களின், மொத்த நேரடி சேமிப்பு திறன் 52.81 பி.சி.எம் ஆகும். 13.08.2020 தேதியிட்ட நீர்த்தேக்க சேமிப்பு அறிக்கையின்படி, இந்த நீர் தேகங்களில் உள்ள மொத்த நேரடி சேமிப்பு 32.08 பி.சி.எம் ஆகும். இது, இந்த நீர்தேகங்களின் மொத்த  நேரடி சேமிப்புத் திறனில் 61% ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பு 65% ஆக இருந்தது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் நேரடிசேமிப்பு இதே காலகட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்புத் திறனில் 55% ஆக இருந்தது. எனவே, நடப்பு ஆண்டில் சேமிப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட குறைவாக உள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் இருந்த சேமிப்பை காட்டிலும், இது சிறந்தாகும்..

 

*****



(Release ID: 1645743) Visitor Counter : 229