பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல் ரோந்துக் கப்பல் ‘சர்தக்’ அறிமுகம்

Posted On: 13 AUG 2020 6:48PM by PIB Chennai

இந்தியக் கடலோரக் காவல்படையின், கடல் ரோந்துக் கப்பல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்புச் செயலர் டாக்டர். அஜய்குமாரின் மனைவி திருமதி.வீணா அஜய்குமார் சர்தக்என்று பெயர் சூட்டினார். கோவா கப்பல் த நிறுவனம் (ஜி எஸ் எல்) தளம் 1236, இல்  நடைபெற்ற, இந்தக் கப்பலை அறிமுகப்படுத்தும் விழா, புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில், காணொளி மாநாடு மூலமாக நடத்தப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து மத்திய அரசு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு, இந்நிகழ்ச்சி நடைபெற்றது பாதுகாப்புச் செயலர் டாக்டர்.அஜய்குமார்; இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குர் திரு.கே.நடராஜன்; ஜி எஸ் எல் அமைப்பின் தலைவர் நிர்வாக இயக்குர்;  மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடல் ரோந்து கப்பல் சர்தக் இதுபோன்ற ஐந்து கப்பல்களில் நான்காவதாகும். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான, “இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கேற்ப இக்கப்பல் கோவா கப்பல் த நிறுவனம் (ஜி எஸ் எல்) நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நாவிகேஷன் தொலைத்தொடர்புக் கருவிகள், சென்சார்கள், இயந்திரங்கள் போன்ற பல கருவிகளும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. 105 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சுமார் 2350 டன் எடையைச் சுமக்கக் கூடியது. 9100 கிலோவாட் டீசல் எஞ்சின்கள் இரண்டு, இக்கப்பலில் உள்ளன. இதனால் அதிகபட்சமாக 26 நாட் வரையிலான வேகத்தில் செல்ல முடியும். 6000 நாட்டிக்கல் மைல் வரை தாக்குப் பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. நவீன கருவிகளும், அமைப்புகளும் பொருத்தப்பட்டு மிக அதிக தொலைவை சென்றடையும் திறன் கொண்ட இந்தக் கப்பல் அதிகாரங்கள் கொடுக்கக்கூடிய தளமாகச் செயல்படும் திறன் கொண்டது. கடலோரக் காவல் படையின் திட்டப்பணிகளை நிறைவேற்ற வல்லது. இரண்டு எஞ்சின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்று, றி இறங்குவதற்கான வசதி; நான்கு அதிவிரைவுப் படகுகள்; விரைவாக ஏறிச் செல்லவும், கண்டுபிடிப்பதற்கான செயல்பாடுகள் மீட்புப்பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும் விரைந்து ஏறிச் செல்லக்கூடிய விரிவுபடுத்தப்பட கூடிய படகு ஒன்று ஆகியவற்றை எடுத்துச் செல்லும் அளவிற்கு இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் கொட்டி மாசு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில், மாசு எதிர்கொள்ளும் கருவியும் இந்தக் கப்பலில் எடுத்துச் செல்லப்படும்.

                                                                      -----



(Release ID: 1645680) Visitor Counter : 195