இந்திய போட்டிகள் ஆணையம்
இந்தியப் போட்டி ஆணையம் (CCI), கெய்ஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கம்பெனி, லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன் மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் இணைந்து தாக்கல் செய்த முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Posted On:
11 AUG 2020 7:03PM by PIB Chennai
இந்தியப் போட்டி ஆணையம் (CCI), கெய்ஹின் கார்ப்பரேஷன், நிசின் கோக்யோ கம்பெனி, லிமிடெட், ஷோவா கார்ப்பரேஷன் மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் இணைந்து தாக்கல் செய்த முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட சேர்க்கையானது, கெய்ஹின் கார்ப்பரேஷன் (“KC”), நிசின் கோக்யோ கம்பெனி., லிமிடெட். (“NKCL”), ஷோவா கார்ப்பரேஷன் (“SC”), மற்றும் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் (“HIAMS”) ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதால் ஹோண்டா மோட்டார் கம்பெனி லிமிடெட் (“HAMCL”) மற்றும் ஹிட்டாச்சி லிமிடெட் (“HL”) கூட்டாக இணைகிறது.
இந்தியாவில், ஹோண்டா மோட்டார் கம்பெனி லிமிடெட் (HAMCL) முதன்மையாக ஆட்டோமொபைல்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில், கெய்ஹின் கார்ப்பரேஷன் (KC) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வாகனங்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனக் கூறுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில், நிசின் கோக்யோ கம்பெனி., லிமிடெட் (NKCL) வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புகளை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில், ஷோவா கார்ப்பரேஷன் (SC) ஆட்டோமொபைல்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கான அதிர்வுத் தாங்கிகளை (shock absorbers) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில், ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், லிமிடெட் (HIAMS), அதன் துணை நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு, பிரேக்கிங் அமைப்புகளுக்கான கூறுகள் உள்ளிட்ட வாகனக் கூறுகளின் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
***********
(Release ID: 1645170)
Visitor Counter : 208