மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர் கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்சத் தரநிலைகள், 2020 - ஐ தொடங்கினார்

Posted On: 11 AUG 2020 4:40PM by PIB Chennai

கல்வி அமைச்சகத்தினால் செய்யப்படும் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், "கட்டடக்கலைக் கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்சத் தரநிலைகள், 2020" ஐ இன்று இங்கு தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கட்டிடக்கலை கவுன்சில் தலைவர் Ar. ஹபீப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பங்கேற்பாளர்ளிடையே திரு. போக்ரியால் உரையாற்றும் போது, இந்தியாவின் தனித்துவமான கட்டடக்கலை அழகு, அதன் நினைவுச்சின்னங்கள் மற்றும் கோயில்கள் பற்றி எடுத்துரைத்தார். அப்போது, கட்டிடக்கலைக் கவுன்சில் (COA) தற்போதைய மற்றும் கடந்த காலக் கட்டிடக்கலைப் பொக்கிஷங்களிலிருந்து உத்வேகம் பெற வேண்டும், மேலும் கட்டிடக்கலைத் துறையில் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம், இந்தியாவை மீண்டும் கட்டிடக் கலைக்கு, உலகத் தலைமையகமாக்க வேண்டும் என்று கூறினார். கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்குமுறைகள் குறித்து பெரிதும் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், மனித வாழ்விடங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றில் நாட்டில் புதிய சூழலைக் கட்டமைத்து, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இந்தியாவின் கட்டிடக்கலை, அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்றார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தோத்ரே, இந்த விதிமுறைகள் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் 1983ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முந்தைய விதிமுறைகளுக்குப் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய வெளிச்சத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போதிருந்து, கல்விச் சூழ்நிலை உலகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. எனவே, நாட்டில் கட்டடக்கலைக் கல்வியைக் கையாளும் ஒழுங்குமுறைகள் இந்தத் துறையின் சமீபத்திய வளர்ச்சியின் வெளிச்சத்தில் திருத்தப்பட வேண்டிய நேரம் இது. பண்டைய நகரங்கள், நினைவுச்சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்கள் போன்ற அனைத்தும் பணக்கார இந்திய கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை ஆகியவற்றின் சான்றாகும். நவீன இந்தியாவின் கட்டிடக்கலை உலகில் மிகச் சிறந்த கட்டிடக் கலைகளுடன் போட்டியிடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

 

******* 



(Release ID: 1645101) Visitor Counter : 256