எரிசக்தி அமைச்சகம்

பவர்கிரிட் நிறுவனம், வரிக்கு பிந்தைய லாபமாக 2020 - 2021ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,048 கோடி ஈட்டியுள்ளது

Posted On: 11 AUG 2020 2:10PM by PIB Chennai

மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (பவர்கிரிட்) ஒரு ‘மகாரத்னா' நிறுவனமாகும். நாட்டின் ‘மத்தியப் பரிமாற்றப் பயன்பாட்டுக்காக’ செயல்படும் இந்த நிறுவனம் 2020 - 2021-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.2,048 கோடி ஈட்டியுள்ளது. மேலும் இதே நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த அடிப்படையில் மொத்த வருமானமாக ரூ.9,817 கோடி ஈட்டியுள்ளது. நிலையான அடிப்படையில் இந்த நிறுவனம் 2020 - 2021-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.1,979 கோடியும், மொத்த வருமானமக ரூ.9,620 கோடியும் பெற்றுள்ளது. காலாண்டின் போது ஒரு விதிவிலக்காக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, கோவிட்-19 நோய்தொற்றுப் பரவலால் ஒரு முறை  ஒருங்கிணைந்த தள்ளுபடியாக, இறுதி நுகர்வோருக்குச் சென்றடையும் வகையில் ஏப்ரல் மற்றும் மே 2020 பட்டியலுக்கு எதிராக விநியோக நிறுவனங்கள் / மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறைகளுக்கு ரூ.1075 கோடி அறிவித்தது. இந்த ஒருமுறை தள்ளுபடியின் தாக்கத்தைத் தவிர்த்து, நிறுவனத்தின் லாபத்தை, 2019-20 நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, நிலையான அடிப்படையில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பவர்கிரிட் நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டுக்கான அறிக்கையின் படி, இந்நிறுவனத்தின் மூலதனச் செலவு சுமார் ரூ.1,906 கோடி. மற்றும் முதலீட்டைக் கொண்ட சொத்துக்களின் மதிப்பு ஒருங்கிணைந்த அடிப்படையில் ரூ.1,184 கோடி (அந்நியச் செலாவணி விகித மாறுபாடு  நீங்கலாக). பவர்கிரிட் நிறுவனத்தின் மொத்த நிலையான  சொத்துக்களின் மதிப்பு ஒருங்கிணைந்த அடிப்படையில் ஜூன் 30, 2020 நிலவரப்படி  சுமார் ரூ. 2,28,856 கோடியாக இருந்தது.

 

*****



(Release ID: 1645076) Visitor Counter : 206