உள்துறை அமைச்சகம்

போர்ட்பிளேர், லிட்டில் அந்தமான், சுயராஜ்ய தீவு ஆகியவற்றை இணைக்கும் 2300 கி.மீ தூர நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருப்பது “அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கு மிக முக்கியமான தருணம்’’ என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்து.

Posted On: 10 AUG 2020 6:11PM by PIB Chennai

போர்ட்பிளேர், லிட்டில் அந்தமான், சுயராஜ்ய தீவு ஆகியவற்றை இணைக்கும் 2300 கி.மீ தூர நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் இரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பதுஅந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கு  மிக முக்கியமான தருணம்’’ என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரம்மாண்டமான திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் இருந்த போதிலும், குறித்த காலத்திற்கு முன்பாகவே இது நிறைவேற்றப்பட்டுள்ளது ‘’ என்று திரு. அமித் ஷா டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திரமோடி, மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள திரு. அமித் ஷா, “ இந்த முக்கியத் திட்டம் , அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வளர்ச்சிக்குப் புதிய அத்தியாயத்தைப் படைக்கும்’’ என்று கூறியுள்ளார்.

பெரு நகரங்களுக்கு இணையாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அகன்ற அலைவரிசை, உயர் வேகத் தொலைத்தொடர்புச் சேவையை இந்த நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டம் அளிக்கும் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர், “-கல்வி, வங்கி வசதிகள், தொலைதூர மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் இது மிகப்பெரிய பயன்களை பெறுவதற்கு வழிவகுக்கும். சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை இது அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

சிறந்த நவீன வசதிகளுடன் மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றும் வகையில், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தை நோக்கி மோடி அரசு உறுதியுடன் செயலாற்றி வருகிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 

*****(Release ID: 1644904) Visitor Counter : 14