பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 – பெருந்தொற்றுக் காலத்தில் சிறப்பான அரசாள்கை நடைமுறைகள் குறித்த ஐடிஇசி-என்சிஜிஜி சர்வதேசப் பயிலரங்கை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 06 AUG 2020 5:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் சர்வதேச கோவிட் ஒருங்கிணைப்பு கண்ணோட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது என்று மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்தார்.  பெருந்தொற்றுக்கு எதிராக எடுக்கப்படும் சர்வதேச ஒருங்கிணைப்பு போன்ற செயல்பாடுகளுக்கு திரு மோடி கடந்த ஆறு ஆண்டுகளில் அயல்நாடுகளுக்கு சென்று வந்தது உதவியாக இருக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு (ITEC) அமைப்பும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறையின் கீழ் உள்ள சிறப்பான அரசாள்கைக்கான தேசிய மையம் (NCGG) ஆகிய இரண்டும் இணைந்து, இன்று நடத்திய ”கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அரசாள்கை நடைமுறைகள்” என்ற சர்வதேசப் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பரஸ்பர சர்வதேச கூட்டுறவு என்ற கருத்தாக்கம் குறித்து சுட்டிக்காட்டிய டாக்டர் ஜித்தேந்திர சிங், 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உத்திரவாதத்துடன் கோவிட்-19 அவசரக்கால நிதியம் உருவாக்கியதில் திரு.மோடி மிக முக்கிய பங்கு வகித்ததோடு மட்டுமல்லாமல் சார்க், நாம் (NAM), ஜி-20 மற்றும் இதர அமைப்புகளில் பெருந்தொற்றுப் பிரச்சனை குறித்து கவனம் ஏற்படுத்தி  உள்ளதோடு மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டின் தலைவர்களோடு தனித்தனியாகவும் கலந்துரையாடி வருகிறார்.

திரு நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ரூ20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருப்பது என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதமாக உள்ளது எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளில் அதிக அளவிலான தொகை ஒதுக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிறகு சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா மிகப்பெரும் பக்கபலமாக இருக்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்குகளில் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளைச் சேர்ந்த 26 நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் என 184 பேர் பங்கேற்று உள்ளனர்.



(Release ID: 1644732) Visitor Counter : 167