பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தனது 33-வது நிறுவன நாளில் ட்ரைஃபெட் நிறுவனம் தனது சொந்த மெய்நிகர் அலுவலக நெட்வொர்க்கை துவக்கியது
प्रविष्टि तिथि:
07 AUG 2020 4:01PM by PIB Chennai
இந்திய பழங்குடியின கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பான ட்ரைஃபெட், தனது 33-வது நிறுவன நாளான ஆகஸ்ட் ஆறாம் தேதியன்று, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனது சொந்த மெய்நிகர் அலுவலக நெட்வொர்க்கைத் துவக்கியுள்ளது.
இந்த மெய்நிகர் அலுவலக நெட்வொர்க், 81 ஆன்லைன் வொர்க்ஸ்டேஷன்களுடன் நூற்றுக்கும் அதிகமான மாநிலம் மற்றும் முகமை வொர்க்ஸ்டேஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, பழங்குடியின மக்களை மைய நீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்கான முயற்சியாகும்.
---
(रिलीज़ आईडी: 1644119)
आगंतुक पटल : 195