சுற்றுலா அமைச்சகம்

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நமது தேசத்தைப் பாருங்கள் வரிசையில் ஐந்து இணையக் கருத்தரங்கங்களை சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது

Posted On: 07 AUG 2020 2:33PM by PIB Chennai

1947-ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கீதத்தை பெருமையுடன் பாடிக் கொண்டாடும் நேரமிது. இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டம் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமும், கடந்த கால நிகழ்ச்சிகளிலேயே மிகவும் அதிக மதிப்பு வாய்ந்ததும் ஆகும். 15 ஆகஸ்ட் அன்று நடைபெறும் இந்த தினத்தின் கொண்டாட்டத்தின் போது, தலைநகரமாம் புதுதில்லியில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை பிரதமர் ஏற்றுவார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

 

15 ஆகஸ்டு, 2020 அன்று 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடு தயாராகி வரும் வேளையில், நாட்டின் மிக முக்கிய நாளை முன்னிட்டு நமது தேசத்தைப் பாருங்கள் வரிசையில் ஐந்து இணையக் கருத்தரங்கங்களை சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது. சுதந்திர இயக்கம், அது தொடர்பான முக்கிய இடங்கள், மற்றும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு குறிப்பிட்ட பங்காற்றிய முன்னோடிகளைக் குறித்து இந்த இணையக் கருத்தரங்குகள் இருக்கும்.

 

  இணையக் கருத்தரங்குகள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு:

 

* 8 ஆகஸ்டு, 2020 (சனிக்கிழமை) அன்று '1857-இன் நினைவுக் குறிப்புகள்: விடுதலைக்கான முன்னுரை' என்னும் தலைப்பில் திருவாளர். நிதி பன்சால், தலைமைச் செயல் அதிகாரி, இந்தியா சிட்டி வாக்ஸ், இந்தியா வித் லோக்கல்ஸ், மற்றும் டாக்டர். சவுமி ராய், தலைவர், செயல்பாடுகள், டபுள்யூ எல், எச்  டபுள்யூ ஆகியோர் நடத்துவார்கள். கலந்து கொள்ள விரும்புபவர்கள் https:/ /bit.ly/Memoirsof1857 என்னும் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

*  10 ஆகஸ்டு, 2020 (திங்கள்கிழமை) அன்று 'சிற்றறைச் சிறை: கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் மற்றும் நினைவுகள்என்னும் தலைப்பில் திருவாளர். நிதி பன்சால், தலைமைச் செயல் அதிகாரி, இந்தியா சிட்டி வாக்ஸ், இந்தியா வித் லோக்கல்ஸ், டாக்டர். சவுமி ராய், தலைவர், செயல்பாடுகள், டபுள்யூ எல் & எச்  டபுள்யூ, மற்றும் திருவாளர். சோம்ரிதா சென்குப்தா, மாநகர ஆய்வுப்பயணம் செய்பவர், இந்தியா சிட்டி வாக்ஸ் ஆகியோர் நடத்துவார்கள்

 

*  12 ஆகஸ்டு, 2020 (புதன்கிழமை) அன்று 'இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அதிகம் தெரியாத கதைகள்' என்னும் தலைப்பில் ஸ்டோரிடிரையல்ஸிலிருந்து திருமதி. அகிலா ராமன் மற்றும் திருவாளர். நயன்தாரா நாயர் ஆகியோர் வழங்குவார்கள்.

 

*  14 ஆகஸ்டு, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று 'ஜாலியன்வாலாபாக்: விடுதலைப் போரின் திருப்புமுனை' என்னும் தலைப்பில் திருவாளர். கிஷ்வர் தேசாய், தலைவர், தி பார்ட்டிஷன் மியூசியம், அமிர்தசரஸ், வழங்குவார்.

 

*  15 ஆகஸ்டு, 2020 ( சனிக்கிழமை) அன்று ' சர்தார் வல்லபாய் படேல் - ஒன்றுபட்ட இந்தியாவின் சிற்பி' என்னும் தலைப்பில் திரு. சஞ்சய் ஜோஷி, கூடுதல் ஆட்சியர், தலைமை மேலாளர், ஒற்றுமைக்கான சிலை, குஜராத் அரசு, நடத்துவார்.

 

* அனைத்து நிகழ்ச்சிகளும் காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்கும்.

 

தனி நபர் இடைவெளி மற்றும் பொதுமுடக்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அதே சமயத்தில், தேசிய மின்-ஆளுகை துறையின் இணையம் சார்ந்த கூட்டங்களுக்கான தளத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் விதத்தில் இந்தக் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிக்காக மெய்நிகர் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ள சுற்றுலா அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. பதிவு செய்து கொள்வதற்கான தகவல்கள் incredibleindia.org, tourism.gov.in மற்றும் வியக்கத்தக இந்தியாவின் (Incredible India) சமூக ஊடகப் பக்கங்களில் கிடைக்கும்.

 

 

******



(Release ID: 1644118) Visitor Counter : 126