ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

2020 ஏப்ரல் - ஜூலையில் 18.79 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை விற்பனை செய்து என்எஃப்எல் நிறுவனம் சாதனை

प्रविष्टि तिथि: 07 AUG 2020 3:09PM by PIB Chennai

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், 18.79 லட்சம்  மெட்ரிக் டன் உரத்தை விற்பனை செய்து, தேசிய உர நிறுவனம் (என்எஃப்எல்) புதிய சாதனை படைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை  அளவான 15.64 லட்சம் மெட்ரிக் டன்னைவிட 20 சதவீதம் அதிகமாகும். யூரியா, டைஅமோனியம் பாஸ்பேட், பொட்டாசியம்,  நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் பென்டோநைட் சல்ஃபர் ஆகியவை இந்த உர விற்பனையில் அடங்கும்.

   தேசிய உர நிறுவனம், 15.87 லட்சம் மெட்ரி்க் டன் யூரியாவை விற்பனை செய்து (கடந்த ஆண்டைவிட 17 விழுக்காடு அதிகம்) சாதனை படைத்துள்ளது

*****


(रिलीज़ आईडी: 1644106) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu , Malayalam