பாதுகாப்பு அமைச்சகம்

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2020-இல் முதல் பரிசை வென்றது

Posted On: 06 AUG 2020 3:07PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பான  மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் (DIAT), பூனே, போட்டியாளர்களிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிய ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2020 என்னும் இணைய ஊடுருவல் போட்டியில் முதல் பரிசை வென்றது.

 

36-மணி நேர தொடர் டிஜிட்டல் பொருள் கட்டமைப்புப் போட்டியான ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்-2020, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் இணைந்து நடத்தப்பட்ட ஒரு தேசிய அளவிலான மென்பொருள் பதிப்புப் போட்டியாகும். உத்திரப் பிரதேசத்தில் உள்ள நோய்டா பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIET) ஆகஸ்ட் 1 முதல் 3 வரை இது நடத்தப்பட்டது.

 

'ஏஜ் ஆஃப் அல்ட்ரான்' (அல்ட்ரானின் யுகம்) என்று பெயரிடப்பட்ட டாக்டர். சுனிதா தாவாலேவால் வழிநடத்தப்பட்ட ஆறு நபர்களைக் கொண்ட DIAT அணி, மென்பொருள் பிரிவின் கீழ் மத்தியப் பிரதேச அரசு அளித்த எம் எஸ் 331 என்னும் சிக்கல் அறிக்கைக்குத் தீர்வு கண்டதற்காக ரூ 1 லட்சம் பரிசை வென்றது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முகம், முகபாவங்கள் மற்றும் சைகைகளைக் கண்டறியும் 'திரிஷ்டி' என்னும் தீர்வை இந்த அணி வழங்கியது.

 

தொடர்ந்து இரண்டாவது முறையாக விருதை வென்றதற்காக DIAT அணியை, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டிபாராட்டினார்.

 

*****



(Release ID: 1643964) Visitor Counter : 128