புவி அறிவியல் அமைச்சகம்

மும்பையில் அதிவேக காற்று மற்றும் மிகக் கனமழை குறித்து சிறப்பு தகவல்

Posted On: 05 AUG 2020 7:45PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின்,   தேசிய வானிலை கணிப்பு மையம் / பிராந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

     இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலத்தில், மும்பை நகரத்தின் சில பகுதிகளில் மிகக் கனமழை பெய்துள்ளது. கொலாபாவில் 22.9 செமீ மழையுடன், மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது.

     மணிக்கு 70 கிமீ வேகத்தில் அதிவேகக் காற்று, ஆகஸ்ட் 6-ம் தேதியன்று காலை, மும்பையிலும் அதை ஒட்டியுள்ள கொங்கன் கடற்கரைப் பகுதியிலும் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையும் நீடிக்கக் கூடும்.

 

*****



(Release ID: 1643708) Visitor Counter : 117