இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அடிமட்ட அளவில் உள்ள திறமைகளை கண்டறிவதற்காக ஆண்டுதோறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு திரு கிரண் ரிஜிஜூ மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
04 AUG 2020 8:34PM by PIB Chennai
அடிமட்ட அளவில் உள்ள ஏராளமான திறமையாளர்களைக் கண்டறிவதற்காக, மாநில அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற, கேலோ இந்தியா திட்டத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில விளையாட்டுத்துறைகளின் அதிகாரிகள் மற்றும் பிற மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளிடையே அவர் உரையாற்றினார்.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் தேசிய அளவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் என்று பல போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இவை உதவியிருக்கின்றன என்றும் திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். ஆனால், இது போதாது என்று வலியுறுத்திய அவர், மாநிலங்களும், கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கூறினார்.
*******
(रिलीज़ आईडी: 1643482)
आगंतुक पटल : 232