பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
மத்திய பழங்குடியின அமைச்சகத்தின் டிரைபெட், ஒத்துழைப்பு மூலமாக வடிவமைப்பு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
Posted On:
04 AUG 2020 6:25PM by PIB Chennai
நவீனத்துவம், தொழில்நுட்பம், மேம்பாடு ஆகியவற்றின் மூலம் அதிவேகமாக மாறிவரும் உலகில், பழமையான பூர்வீகத்தின் வேர்கள் களையப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் இன்னும் 200-க்கும் மேற்பட்ட பூர்வ பழங்குடிகள் பரவி இருக்கின்றனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள், தங்களது சமுதாயத்தின் பாரம்பரியமான பொருள்கள் மற்றும் கலைகளை இன்னும் போற்றிப் பாதுகாத்து வரும் வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பழங்குடியின நல அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED), வாய்ப்பு அற்ற இந்த சமுதாய மக்களின் பொருளாதார நலத்தை மேம்படுத்தி, அவர்களை முக்கிய நீரோட்டடத்துடன் இணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பல்வேறு முன்முயற்சிகள், செயல்படுத்துல் மற்றும் திட்டங்களில், டிரைப்ஸ் இந்தியாவின் வடிவமைப்பு முன்முயற்சி முக்கியமானதாகும்.
அமைப்பு ரீதியிலான, பழங்குடியினக் கைவினைஞர்களுக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளித்து, அவர்களது திறமைகளை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் வகையில், டிரைபெட் புகழ்பெற்ற வடிவமைப்பு நிபுணர்களுடன், கடந்த சில மாதங்களாக வடிவமைப்பு மேம்பாடு குறித்து கூட்டாக ஆலோசித்து வருகிறது. இதில், திருமிகு. ரீத்து பேரி, திருமிகு. ரினா தாகா, திருமிகு. ருமா தேவி, திருமிகு. விங்கி சிங், திருமிகு.நீரா நாத், திருமிகு ரோசி அலுவாலியா உள்ளிட்டோர் அடங்குவர்.
-----------------------------------------------------------------------------------------------
*****
(Release ID: 1643386)
Visitor Counter : 216