மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிர்மாவுர் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு (இமாச்சலப் பிரதேசம்) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Posted On: 04 AUG 2020 6:50PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க் ‘, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. ஜெய்ராம் தாகூர், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே ஆகியோருடன் இணைந்து , இமாச்சலப் பிரதேசம் சிர்மாவுரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கான (ஐஐஎம்) அடிக்கல்லை இணையத்தின் மூலம் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கல்வி அமைச்சர், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014-ஆம் ஆண்டு சிர்மாவுர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் உள்பட ஏழு புதிய இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களை உருவாக்க முடிவெடுத்தது என்றார்அப்போது இருந்த ஐஐஎம்-களால் உருவாக்கப்பட்ட பெரு வணிக நிறுவனத் தலைவர்களுக்கு உள்ள தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப இந்த ஐஐஎம்கள் உருவாக்கப்படுகின்றன என அவர் கூறினார். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி , இமாச்சலப் பிரதேசம், சிர்மாவுர் மாவட்டம் தவ்லாகானில் ஐஐஎம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது என அவர் தெரிவித்தார். 2015 மார்ச் 12-ஆம் தேதி, மாநில அரசு தவ்லாகானில் 210 ஏக்கர் நிலத்தை , நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை அமைப்பதற்காக ஒதுக்கியது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவுரில் பவண்டா சாகிப் என்னுமிடத்தில் , தற்காலிக வளாகத்தில் , முதல் தொகுதி பிஜிபி மாணவர்கள் 20 பேருடன், ஆகஸ்ட் மாதத்தில் வழிகாட்டு நிறுவனம் என்ற வகையில், ஐஐஎம் லக்னோவால் ஐஐஎம் சிர்மாவுர் இயங்கி வருகிறது என அமைச்சர் தெரிவித்தார். அப்போதிருந்து, இந்த நிறுவனம் முன்னேற்றத்துடன் செயல்பட்டு, கல்வி ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் புதிய உச்சத்துக்குச் சென்றுள்ளதுதற்போது இயங்கிவரும் தற்காலிக வளாகம், மாணவர்கள் தங்கிப் படிக்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதாக இயங்கி வருகிறது என அவர் தெரிவித்தார். கல்வி ரீதியாக மட்டுமல்லாமல், மாணவர்கள், பல்வேறு கலாச்சர, விளையாட்டு, சமுதாய களப்பணி நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

210 ஏக்கர் பரப்பளவில் தவ்லாகானில் அமையவுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர வளாகத்தில், 1170 மாணவர்கள் கல்வி கற்பார்கள். மத்திய அரசு இதற்காக ரூ.531.75 கோடி ஒதுக்கியுள்ளது என்றும், இதில் ரூ.392.51 கோடி , 600 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதி கொண்ட 60384 சதுர மீட்டர் பரப்பிலான முதல் கட்ட கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1643366) Visitor Counter : 237