தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ரேடியோ நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்ட கடைசி மைல் தொலைத் தொடர்பு இணைப்பு தீர்வான ”பாரத் ஏர்ஃபைபரை” திரு. சஞ்சய் தோத்ரே திறந்து வைத்தார்.
Posted On:
02 AUG 2020 12:43PM by PIB Chennai
இந்திய அரசாங்கத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டு, மின்னணு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே, மகாராஷ்டிராவின் அகோலாவில் “ பாரத் ஏர் ஃபைபர் சேவைகளை” திறந்து வைத்தார். பாரத் ஏர் ஃபைபர் சேவைகளின் தொடக்கத்துடன், அகோலா & வாஷிம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் தேவைக்கேற்ப வயர்லெஸ் இணைய இணைப்புகளைப் பெறுவார்கள்.
இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத் ஏர் ஃபைபர் சேவைகளை பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகப்படுத்தியுள்ளது, இந்தச் சேவை பிஎஸ்என்எல் (BSNL) இருப்பிடங்களிலிருந்து 20 கிமீ தூரத்தில் வயர்லெஸ் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, டெலிகாம் உள்கட்டமைப்புக் கூட்டாளர்களின் (TIPs) ஆதரவுடன் மலிவான சேவைகளுடன் வருவதால்,தொலைதூர இடங்களில் உள்ள BSNL வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள்.
அகோலா மற்றும் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல்லின் உள்ளூர் வணிகப் பயனாளிகள் மூலம் பிஎஸ்என்எல் “பாரத் ஏர் ஃபைபர் சேவைகளை” வழங்குகிறது, மேலும் இந்தச் சேவைகள் சரியான இணைய இணைப்பை விரைவான நேரத்தில் வழங்கும். பிஎஸ்என்எல் வரம்பற்ற இலவசக் குரல் அழைப்பை வழங்குவதால் இந்தச் சேவைகள் பிற ஆபரேட்டர்களிடமிருந்து தனிச்சிறப்பானது என்பதுடன் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
இந்த உயர் தொழில்நுட்பச் சேவைகளுடன் பிஎஸ்என்எல் (BSNL) தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் அதே நேரத்தில் பிஎஸ்என்எல் (BSNL) அகோலா மற்றும் வாஷிம் மாவட்டத்தின் உள்ளூர்வாசிகளுக்கு பிஎஸ்என்எல் உடன் டெலிகாம் உள்கட்டமைப்புக் கூட்டாளர்களாகக் கைகோர்க்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. இதனால் அவர்கள் மாதந்தோறும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மாத வருமானம் ஈட்டுவதுடன், இதன்மூலம் இந்திய அரசின் “சுயசார்பு இந்தியா” முயற்சிகளின் கீழ் தன்னம்பிக்கை பெறுவார்கள்.
இந்த பாரத் ஏர் ஃபைபர் சேவைகள் விரைவான வயர்லெஸ் இணைய இணைப்பு மற்றும் குரல் சேவைகளின் புதிய வழியை நியாயமான செலவில் தருகிறது. பி.எஸ்.என்.எல் 100 எம்.பி.பி.எஸ் வேகம் வரை ”பாரத் ஏர் ஃபைபர்” இணைப்பை வழங்குகிறது. பிஎஸ்என்எல் வயர்லைன் மற்றும் வயர்லெஸ் பிரிவுகளில் கவர்ச்சிகரமான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவதுடன், ஊரடங்கின் போது, அரசு மற்றும் பல தனியார் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட வீட்டிலிருந்து வேலையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு தேவையான இணைய இணைப்பை வழங்கியதன் மூலம் பிஎஸ்என்எல் மிகவும் நம்பகமான பிராண்டாகவும் செயல்பட்டது.
லேண்ட்லைன் / பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர் FTTH இணைப்புகளை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக வழங்குகிறது. ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல், பி.எஸ்.என்.எல் மகாராஷ்டிரா வட்டத்தில் 15000 FTTH இணைப்புகளையும், இந்தியா முழுவதும் 162000 FTTH இணைப்புகளையும் வழங்கியுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயின் காரணமாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் இவை அற்புதமான சாதனைகள்.
வயர்லெஸ் பாரத் ஏர் ஃபைபர் அறிமுகப்படுத்தப்படுவதால், மிக விரைவான நேரத்தில் தேவைக்கேற்ப கூடுதல் இணைப்புகள் வழங்கப்படும். அகோலா & வாஷிம் மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும், இந்த தரமான மற்றும் மிகவும் விலை மலிவான சேவைகளைப் பெற்று பயனடைய பிஎஸ்என்எல் வேண்டுகோள் விடுக்கிறது.
(Release ID: 1643009)
Visitor Counter : 238