நிதி அமைச்சகம்

2020-21-ஆம் நிதி ஆண்டுக்கான, 2020 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

Posted On: 31 JUL 2020 4:41PM by PIB Chennai

2020 ஜூன் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திரக் கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

மத்திய அரசு 2020 ஜூன் மாதம் வரையில், ரூ.1,53, 581 கோடி வருவாய் பெற்றுள்ளது (2020-21 மொத்த வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 6.84%), இதில், ரூ.1,34,822 கோடி வரி வருவாய் ( நிகரம்) , ரூ.15,186 கோடி வரி அல்லாத வருவாய், ரூ.3,573 கோடி கடன் அல்லாத முதலீட்டு வருவாய் ஆகியவை அடங்கும்கடன் அல்லாத முதலீட்டு வருவாயில் , கடன்கள் மீட்பு அடங்கும் (ரூ.3,573 கோடி).

இந்தக் காலகட்டத்தில், ரூ.1,34,043 கோடியை , மாநில அரசுகளுக்கு , வரிப் பகிர்வுத் தொகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 14,588 கோடி குறைவாகும்.

மத்திய அரசின் மொத்த செலவு ரூ.8,15,944 கோடி (2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 26.82%) , இதில், ரூ.7,27, 671 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.88, 273 கோடி முதலீட்டு கணக்கிலும் உள்ளதுமொத்த வருவாய்ச் செலவில், 1,60,493 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. ரூ.78,964 கோடி , பெரிய மானியங்கள் கணக்கில் சேர்ந்துள்ளது.

 

************



(Release ID: 1642708) Visitor Counter : 176