பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப் படையின் மேற்கு ஏர் கமாண்டின் தலைமை அதிகாரி, ஏர் மார்ஷல் பி. சுரேஷ் PVSM AVSM VM ADC, ஓய்வு பெற்றார்.
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2020 4:32PM by PIB Chennai
இந்திய விமானப் படையின் மேற்கு ஏர் கமாண்டின் தலைமை அதிகாரி, ஏர் மார்ஷல் பி. சுரேஷ் PVSM AVSM VM ADC, சுமார் 40 ஆண்டுகால சிறந்த பணிக்குப் பின்னர், 2020 ஜூலை 31-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார்.
1980-ஆம் ஆண்டில் ஏர் மார்ஷல் , படை விமான விமானியாக , இந்திய விமானப் படையில் சேர்ந்தார். டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி மற்றும் கடக்வாசலா தேசிய பாதுகாப்பு அகாடமி ஆகியவற்றின் பழைய மாணவரான ஏர் மார்ஷல், டாக்டிஸ் அன்ட் ஏர் கம்பாட் டெவலப்மென்ட் அமைப்பின் ‘ ஸ்வார்ட் ஆப் ஆனர் ‘ விருது பெற்றவராவார். இந்த அதிகாரி, வெலிங்டன் பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி மற்றும் இங்கிலாந்தின் சிறிவென்காம் கிரான்ட்பீல்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
வாயு சேனா பதக்கம் பெற்ற ஏர் மார்ஷல், உயரிய சிறப்பைப் பெற்ற அதிகாரியாக விளங்கினார். நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பான சேவை புரிந்ததற்காக, அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் , பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். அவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் கவுரவ எய்ட்-டி- கேம்ப் ஆகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

(வெளியீட்டு அடையாள எண்: 1642705)
வருகையாளர் எண்ணிக்கை : 309