அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முயற்சியாக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலும், 1,000-க்கும் மேற்பட்ட சார்ஸ் CoV-2 வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளதாக டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்

Posted On: 30 JUL 2020 8:03PM by PIB Chennai

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முயற்சியாக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகளும் இணைந்து, 1,000-க்கும் மேற்பட்ட    சார்ஸ்-CoV-2  வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்அறிவித்துள்ளார்.   “இந்தியாவில் காணப்படும் களைப்பு மற்றும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, இதன் மூலம் நோயைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்  தயாரிக்கப் பயன்படும்என்றும் அவர் தெரிவித்தார்

புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கிய கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை டாக்டர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.   நோய் கண்டறிதல், மருந்துப் பொருட்கள், வென்டிலேட்டர்கள்தனிநபர் உடல் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள், உட்பட, ஏராளமான தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள், இந்த கூட்டு முயற்சியில் அடங்கும்.  93 தொழில் நிறுவன பங்குதாரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதோடு,  60-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களும்தொழிற்சாலைகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டன.  

இது குறித்து மனநிறைவு தெரிவித்த மத்திய அமைச்சர்கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் , பரிசோதனைத் திறனை அதிகரிப்பது  முதல் நோய் கண்டறிதலுக்கான புதிய முறைகள், மற்றும் குறைந்த விலையிலான மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்கச் செய்வது வரை, பல்வேறு முனைகளிலும், தொழில் துறையினரின் ஒத்துழைப்புடன்அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்கொண்ட முயற்சி“  பாராட்டத்ததக்கது என்றும் தெரிவித்தார்.    “மேலும், பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பற்றாக்குறையில் இருந்த வென்டிலேட்டர்கள், தனிநபர் உடல் பாதுகாப்பு கவசங்களை உருவாக்கியதன் மூலம், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் மருத்துவமனைகளுக்கு உதவிகரமாக இருந்ததுஎன்றும் அவர் குறிப்பிட்டார்இது தவிர,   “கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் அதுகுறித்த அறிவாற்றலைஅறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் தற்போது தொகுத்துள்ளது“  என்றும் அவர் கூறினார்

கோவிட்-19க்கு எதிரானசிப்லா நிறுவனத்தின் ஃபேவிபிராவிர் (Favipiravir) போன்ற  மறுபயன்பாட்டு மருந்துகளை நோயாளிகளுக்கு விரைவில் கிடைக்கச் செய்ய, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து  அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டுத் தெரிவித்தார்

 

******



(Release ID: 1642546) Visitor Counter : 145