மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் பெரும் மாற்றங்களை தேசிய கல்விக் கொள்கை 2020 கொண்டு வரும் - மனித வள மேம்பாடு அமைச்சர்
நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆலோசனை மற்றும் விவாத செயல்முறைகளில் ஒன்றின் விளைவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது - திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'

தேசிய கல்வி கொள்கை 2020 மிகவும் விரிவானது, தீவிரமானது மற்றும் நாட்டின் கல்வித்துறை வரலாற்றின் எதிர்கால கொள்கை ஆவணம் ஆகும் - திரு. சஞ்சய் தோத்ரே

Posted On: 29 JUL 2020 8:40PM by PIB Chennai

நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் பெரும் மாற்றங்களை தேசிய கல்விக் கொள்கை 2020 கொண்டு வரும் என்று மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை 2020-க்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கிய பின்னர் புது தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆலோசனை மற்றும் விவாத செயல்முறைகளில் ஒன்றுக்கு பிறகு தேசிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆலோசனைகளுக்காக வரைவுக் கொள்கையைப் பொதுத் தளத்தில் வைத்ததற்குப் பிறகு 2.25 லட்சம் ஆலோசனைகள் வரப்பெற்றதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

 

தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும் அமைச்சரவைக்கும் தனது நன்றியை தெரிவித்த திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட்டதன் மூலம், மிகப்பெரிய அறிவு மையமாகவும், உலகத்தில் கல்விப் பயண இலக்காகவும் இந்தியா மாறும் எனக் கூறினார்.  

 

புதிய இந்தியாவை உருவாக்குவதில் தேசிய கல்விக் கொள்கை 2020 முக்கிய பங்காற்றும் என்று திரு. நிஷாங்க் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த மத்திய அமைச்சர், இதை நாட்டின் வரலாற்று நிகழ்வாக வர்ணித்தார். நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் பெரும் மாற்றங்களை இந்தக் கொள்கை கொண்டு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் உயர்தர விரைவான குழந்தைப்பருவ பராமரிப்பு, கல்விக்கான உலகளாவிய அணுகுதலை தேசிய கல்விக் கொள்கை 2020 உறுதி செய்யும் என்று அவர் கூறினார். சமூகத் திறன்கள், உணர்திறன், நல்ல நடத்தை, நெறிமுறைகள், குழுவாக இயங்குதல், குழந்தைகளுக்கிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றை மகிழ்ச்சியான முறையில் மேம்படுத்த நாங்கள் கவனம் செலுத்துவோம் என்று அவர் கூறினார்.

<>Twitter post translation starts<>

"மாற்றத்துக்காக கற்பி, அதிகாரமளிப்பதற்காக கல்வி பெறச் செய், தலைமையேற்பதற்காக கற்றுக்கொள்" - மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி

இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றும் அவரின் லட்சியத்துக்கேற்ப, தேசிய கல்வி கொள்கை 2020- நாங்கள் இறுதியாக உங்களுக்கு வழங்குகிறோம்!

புதிய இந்தியாவுக்கான புதிய வழி

#NEP2020 #एनईपी2020

<>Twitter post translation ends<>

21-ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான இது, 34 வருட பழமையான கல்விக்கான தேசியக் கொள்கையை (1986) மாற்றுகிறது. அணுகுதல், சமநிலை, தரம், கட்டுபடியாதல், பொறுப்பேற்றல் ஆகியவற்றை அடிப்படை தூண்களாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை, நிலையான வளர்ச்சியை நோக்கிய 2030-க்கான லட்சியத்தை ஒத்துள்ளது. கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை இன்னும் முழுமையானதாகவும், நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் மற்றும் ஒவ்வொரு மாணவரின் பிரத்யேகத் திறன்களை வெளிக்கொண்டு வருவதாகவும் மாற்றி, இந்தியாவை துடிப்பு மிக்க அறிவு சமூகமாகவும், உலகத்தின் அறிவு வல்லரசாகவும் மாற்றும் நோக்கம் கொண்டது.

தேசிய கல்விக் கொள்கை 2020, நாட்டின் கல்வி வரலாற்றில் மிகவும் விரிவான, அறிவுசார்ந்த  மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட கொள்கை ஆவணம் என்று மனித வள மேம்பாடு இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே கூறினார். தரமான மற்றும் விளைவுகள் சார்ந்த கல்வியை ஒவ்வொருவருக்கும் வழங்குவதில் எந்தத் தடையையும் அது உருவாக்கவில்லை. குழந்தைகளின் ஆரம்ப வயதுகளில், அதாவது 3-5 வருடங்களில்- அவர்களின் பராமரிப்பு மற்றும் கல்விக்காக இது ஒருங்கிணைக்கிறது. முக்கிய சிந்தனைகள், அனுபவம் மற்றும் செயல் சார்ந்த கற்றல், கற்றலில் நெகிழ்வுத்தன்மை, வாழ்கைத் திறன்கள் மீது கவனம், பல்துறைகள் மற்றும் தொடர் ஆய்வு ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும். பள்ளியை விட்டு நின்ற 2 கோடி குழந்தைகளை மீண்டும் அழைத்து வருதல் மற்றும் 3 வருடங்களில் பள்ளிக் கல்வியை சர்வதேசமயமாக்குதல் ஆகியவை 'யாரையும் விட்டு விடக்கூடாது என்ற தத்துவத்தின் மீதான எங்கள் உறுதியை பிரதிபலிக்கிறது. மதிப்பெண் புள்ளிகள் வங்கி, தேசிய ஆய்வு நிறுவனம், அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுக்கான தேசிய இயக்கம் ஆகியவை நம்முடைய கல்வி முறையை பெரிய அளவில் மாற்றியமைக்கக் கூடிய சில முக்கிய கொள்கைகள் ஆகும்.

தேசிய கல்வி கொள்கை பற்றிய விரிவான தகவல்களை பெற இங்கே சொடுக்கவும்.

*****(Release ID: 1642257) Visitor Counter : 130