எரிசக்தி அமைச்சகம்

மின் விநியோக அமைப்பு தொழில்நுட்ப பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 29 JUL 2020 3:26PM by PIB Chennai

மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான மின்சக்தி நிதி நிறுவனம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி, மின்சக்தி நிதி நிறுவனம் தனது சமுதாய கடப்பாடு திட்டத்தின் கீழ், ரூ.2,38,97,000-ஐ, நிதியுதவியாக, கான்பூர் தொழில்நுட்ப பயிலகத்திற்கு அளிக்க உள்ளது.

மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு உதவி செய்வதுதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்று மின்சக்தி நிதி நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு.ஆர்.முரஹரி தெரிவித்துள்ளார்.

******


 



(Release ID: 1642027) Visitor Counter : 241