எரிசக்தி அமைச்சகம்

தேசிய அனல் மின் உற்பத்தி நிறுவனத்தின், ஒருநாள் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவான 977.07 மில்லியன் யூனிட்டை எட்டியது

Posted On: 29 JUL 2020 2:16PM by PIB Chennai

மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிறுவனம், இம்மாதம் 28-ந் தேதியன்று, ஒருநாள் உற்பத்தியில் அதிகபட்ச அளவான 977.07 மில்லியன் யூனிட்டை எட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் துணை மின் நிலையங்கள் மற்றும் ஜேவி நிறுவனங்களின் மின் உற்பத்தியையும் சேர்த்து இந்த உற்பத்தி அளவு எட்டப்பட்டுள்ளது.

ஜூலை 28-ந் தேதியன்று, சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, சைபட், லாரா மின் நிலையங்களும், ஒடிசாவில் உள்ள தல்ச்சர் கனிஹா மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கோல்டம் மின் நிலையங்களும் 100 சதவீத உற்பத்தியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஒருநாளைய அதிகபட்ச அளவு, 2019 மார்ச் 12-ல் எட்டப்பட்டது, அன்று 935.46 மில்லியன் யூனிட் மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

 

******



(Release ID: 1642020) Visitor Counter : 183