ரெயில்வே அமைச்சகம்

கோவிட்19 தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு,அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்தை ரயில்வே கையாண்டுள்ளது

Posted On: 28 JUL 2020 5:26PM by PIB Chennai

கோவிட் தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டு இந்திய ரயில்வே சிறப்பு மைல்கல்லை எட்டியுள்ளது.27 ஜூலை 2020 அன்று இந்திய ரயில்வே மொத்தம் 3.13 எம்டி சரக்குப் போக்குவரத்தை கையாண்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே நாளின் சரக்குப் போக்குவரத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

 

பொதுமுடக்கக் காலத்தின்போது நீண்டகால சாதனைகளையும் அதிக அளவில் சென்றடையக்கூடிய இலக்கையும்அடைய வேண்டியது அவசியம் என்று மாண்புமிகு பிரதமர் வலியுறுத்தி இருந்தார். அதற்கேற்ப, ரயில்வே, பொதுமுடக்கக் காலத்தில் சுமார் 200 கட்டமைப்புப் பணிகளை நிறைவு செய்தது. தற்போது ரயில்வே சரக்குப் போக்குவரத்திலும் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.

பொதுவாக சரக்குப் போக்குவரத்து ரயில்களின் சராசரி வேகம் 27 ஜூலை 2020 அன்று மணிக்கு 46.16 கிலோ மீட்டராக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே நாளின் சராசரி வேகத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.( மணிக்கு 22.52 கிலோமீட்டர்). ஜூலை மாதத்தில் சரக்குப் போக்குவரத்து ரயில்களின் வேகம் 45.03 கிலோ மீட்டராக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே மாதத்தில் இருந்தவேகத்தைக் காட்டிலும் சுமார் இரு மடங்கு அதிகமாகும்(மணிக்கு 23.22 கிலோமீட்டர்) மேற்கு மத்திய ரயில்வே சராசரி வேகம் மணிக்கு 5 4.23 கிலோமீட்டர். வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வே மணிக்கு ஐம்பத்தொரு கிலோமீட்டர். தென்கிழக்கு மத்திய ரயில்வே மணிக்கு 42.83 கிலோமீட்டர். தென் கிழக்கு இரயில்வே மணிக்கு 43.24 கிலோமீட்டர். மேற்கு ரயில்வே மணிக்கு 44.4 கிலோமீட்டர் சராசரி வேகம் கொண்டிருந்தன. இந்திய ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தில் சராசரி வேகத்தில் முன்னிலையில் இந்த ரயில்வே மண்டலங்கள் உள்ளன.

27 ஜூலை 2020 அன்று ரயில்வேயில் ஏற்றிச் செல்லப்பட்ட மொத்த சரக்குப் போக்குவரத்து 3.13 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு இதே நாளின் அளவைவிட அதிகமாகும்.27 ஜூலை 2020 அன்று மொத்தம் 1039 ரேக்குகள் இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டன. இதில் எழுபத்தாறு ரேக்குகள் உணவு தானியங்கள்;உரம் 67 ; கு 49,சிமெண்ட் 113, இரும்புத்தாது 113;நிலக்கரி 363.



(Release ID: 1641913) Visitor Counter : 217