பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 5-வது நினைவு நாளையொட்டி, புத்தாக்கப் படைப்பாளர்கள், தொடக்க நிறுவனங்களுக்கான போட்டியை டிஆர்டிஓ துவக்கியது
Posted On:
27 JUL 2020 8:59PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 5-வது நினைவு நாளான இன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), “கனவு காணும் துணிவு 2.0” என்ற தலைப்பில் புத்தாக்கப் போட்டியை துவக்கி உள்ளது. நமது நாட்டில் உள்ள புத்தாக்கப் படைப்பாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் தனி நபர்களையும், தொடக்க நிறுவனங்களையும் ஊக்குவிப்பதற்காகவும், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கினை ஒட்டியும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வல்லுனர் குழு, விரிவான மதிப்பீட்டுக்கு பிறகு வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும். வெற்றி பெறும் தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும், தனிநபருக்கு ரூ.5 லட்சமும் விருது தொகையாக வழங்கப்படும். விரிவான தகவல்களுக்கு டிஆர்டிஓ இணையதளத்தை www.drdo.gov.in காணலாம்.
*****
(Release ID: 1641756)
Visitor Counter : 293