சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத்- உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (AB-HWCs) கோவிட் காலங்களில் தங்கள் இருப்பை உணர்ந்தன.

Posted On: 27 JUL 2020 4:45PM by PIB Chennai

கோவிட்-19 C தொற்றுநோய்களின் போது, ​​ இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகள் குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் (AB - HWCs) தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலம் கோவிட் அல்லாத அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதோடு, கோவிட்-19 இன் தடுப்பு மற்றும் நிர்வாகத்தின் அவசர பணிகளையும் பூர்த்தி செய்கிறது

தொற்றுநோயின் நெருக்கடி காலக்கட்டத்தில் சுகாதாரச் சேவைகளின் அனைத்தும் அவர்கள் சேவை செய்யும் மக்களின் பரந்த சமூகத்தைச் சென்றடைவதை உறுதிசெய்ய (ஜனவரி முதல் ஜூலை 2020 வரை) கூடுதலாக 13,657 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWCs) செயல்படுத்தப்பட்டன. ஜூலை 24, 2020 நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 43,022 657 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWCs) செயல்பட்டு வருகின்றன.

ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை உள்ள வாரத்தில், மொத்தம் 44.26 லட்சம் பேர் , ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களால் (AB - HWCs)  வழங்கப்படும் சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளால் பயனடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களால் (AB - HWCs) கடந்த வாரம் 32,000 யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே மொத்தம் 14.24 லட்சம் யோகா அமர்வுகள் HWCகளால் நடத்தப்பட்டுள்ளன.

இது தவிர, தொற்றுநோயற்ற நோய்களுக்கான பரிசோதனையில் சுகாதார ஆரோக்கிய மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும், 3.83 லட்சம் நபர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு 3.14 லட்சம், வாய்வழி புற்றுநோய்க்கு 1.15 லட்சம், மார்பக புற்றுநோய்க்கு 45,000 மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 36,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்தே, சுகாதார ஆரோக்கிய மையங்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு மொத்தம் 4.72 கோடி நபர்களையும், நீரிழிவு நோய்க்கு 3.14 கோடியும், வாய்வழி புற்றுநோய்க்கு 2.43 கோடியும், மார்பகப் புற்றுநோய்க்கு 1.37 கோடியும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 91.32 லட்சமும் பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடதக்கது. 

**********


(Release ID: 1641603) Visitor Counter : 295