புவி அறிவியல் அமைச்சகம்

புவி அறிவியல் அமைச்சகத்தின் நிறுவன நாளன்று, அமைச்சகம், அறிவு ஆதார மைய நெட்வொர்க் (கே ஆர் சி நெட்) ஒன்றைத் துவக்கியுள்ளது

Posted On: 27 JUL 2020 4:33PM by PIB Chennai

அமைச்சகம், உலகத்தரம் வாய்ந்த, அறிவு ஆதார மைய நெட்வொர்க் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, தற்போது புவி அறிவியல் அமைச்சகத்தின் பாரம்பரிய நூலகங்கள், உயர் தரம் கொண்ட அறிவு ஆதார மையமாக மேம்படுத்தப்படும். இந்த அறிவு ஆதார மையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக இருக்கும். இவை அனைத்தும் கே ஆர் சி நெட் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். புவி அறிவியல் மைய அமைச்சகத்தின் அறிவுசார் உலகத்துக்குள் நுழைவதற்கான ஒற்றை முனை வழியாக இது செயல்படும்.

 

மிகச் சிறப்பான முறையில் இயங்கும், மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கே ஆர் சி நெட் இணையதளம் மூலமாக, புவி அறிவியல் அமைச்சகத்தின் அனைத்து அறிவு ஆதாரங்களையும், சேவைகளையும் 24 மணி நேரமும் பெறமுடியும். இதற்கான பரிசோதனை அளவிலான திட்டம், புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிற அமைப்புகளின் தளங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்.

 

******



(Release ID: 1641574) Visitor Counter : 211