உள்துறை அமைச்சகம்
மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்து
Posted On:
27 JUL 2020 3:52PM by PIB Chennai
மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “துணிச்சல் மிகுந்த சிஆர்பிஎஃப் வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் 82-வது அமைப்பு தினத்தில் வாழ்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்களுடன் நான் இணைகிறேன். வீரம், தைரியம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக சிஆர்பிஎஃப் திகழ்கிறது. சிஆர்பிஎஃப் நமது நாட்டை மீண்டும் மீண்டும் பெருமை கொள்ளச் செய்கிறது," என்றார். "கோவிட்-19-இன் போது சமுதாயத்துக்கு சேவையாற்றும் சிஆர்பிஎஃப்-இன் அர்ப்பணிப்புக்கு ஈடில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
அரச பிரதிநிதியின் காவல் பிரிவாக 27 ஜூலை, 1939 அன்று மத்திய ரிசர்வ் காவல் படை அமைக்கப்பட்டது. 28 டிசம்பர், 1949-இல் சிஆர்பிஎஃப் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து அது மத்திய ரிசர்வ் காவல் படையாக மாறியது. 82 வருட போற்றத்தக்க வரலாற்றை அது இன்று நிறைவு செய்தது.
*****
(Release ID: 1641570)
Visitor Counter : 234