உள்துறை அமைச்சகம்

21-வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி, தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை, அவர்களது துணிச்சல் மற்றும் வீரத்தை நினைவு கூர்ந்தார்

கார்கில் வெற்றி தினம் இந்தியாவின் சுயமரியாதை, இணையற்ற துணிச்சல், வலுவான தலைமையின் அடையாளம்.

‘’ உலகின் மிகக் கடினமான பகுதிகளில் ஒன்றான கார்கிலில் இருந்து எதிரிகளை விரட்டி, அதன் சிகரத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி மகத்தான வீரத்தைப் பறைசாற்றிய தீரமிக்க வீரர்களை நான் வணங்குகிறேன். தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட துணிச்சல்மிக்க வீரர்களைக் கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது’’- திரு. அமித் ஷா

Posted On: 26 JUL 2020 2:14PM by PIB Chennai

21-வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா , தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். அவர்களது துணிச்சலையும், வீரத்தையும் நினைவுகூர்ந்த அவர், கார்கில் வெற்றி தினம் , இந்தியாவின் சுயமரியாதை, ஈடு இணையற்ற துணிச்சல், வலுவான தலைமை ஆகியவற்றின் அடையாளம் என்று கூறினார்.

‘’ உலகின் மிகக் கடினமான பகுதிகளில் ஒன்றான கார்கிலில் இருந்து எதிரிகளை விரட்டி, அதன் சிகரத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி மகத்தான வீரத்தைப் பறைசாற்றிய தீரமிக்க வீரர்களை நான் வணங்குகிறேன்தாய்நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட துணிச்சல்மிக்க வீரர்களைக் கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது’’என்று திரு. அமித் ஷா கூறினார்.

ஆபரேசன் விஜய் என்ற பெயரில்  நடைபெற்ற  போரில் 1999 –ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்திய ஆயுதப்படையினர் பாகிஸ்தானை வெற்றி கண்டனர். அது முதல்இந்திய வீரர்களின் வெல்ல முடியாத வீரம், துணிவு, உயிர்த்தியாகம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

*****



(Release ID: 1641393) Visitor Counter : 200