விவசாயத்துறை அமைச்சகம்

குவாலியர் – சம்பல் பிராந்தியத்தில் உள்ள பெருமளவிலான மலைப்பாங்கான நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவது குறித்து, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

Posted On: 26 JUL 2020 10:58AM by PIB Chennai

 

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர்சம்பல் பிராந்தியத்தில் உள்ள பெருமளவிலான மலைப்பாங்கான நிலங்களை, சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றுவது குறித்து, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் 25 ஜுலை, 2020 அன்று காணொளிக் காட்சி மூலம்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்இந்த பேச்சுவார்த்தையில், மத்தியப்பிரதேச மாநில வேளாண்துறை உயர் அதிகாரிகள், குவாலியரில் உள்ள ராஜமாதா விஜயராஜே சிந்தியா வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர், விஞ்ஞானிகள், மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளும் பங்கேற்றனர்.   இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, உலக வங்கியுடன் இணைந்து தயாரிப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முன்னதாகஇது குறித்து, உலக வங்கிப் பிரதிநிதிகளுடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதுமுதற்கட்ட திட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்கள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான கரடு முரடான நிலங்கள், எவ்வித சாகுபடியும் செய்ய முடியாமல் இருப்பதாகவும், இந்த நிலங்களை சீர்படுத்தினால், குவாலியர்சம்பல் பிராந்தியத்தின் மலைப்பாங்கான  நிலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.   இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள  சீர்திருத்தங்கள், வேளாண் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதுடன், இப்பகுதியின் விரிவான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றார்.  

குவாலியர்சம்பல் பிராந்தியத்தில் உள்ள மலைப்பாங்கான இடங்களின் மேம்பாட்டிற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் திரு.தோமர் தெரிவித்தார்.   சம்பல் விரைவுச்சாலை இப்பகுதி வழியாக அமைக்கப்படுவதன் மூலம், இப்பகுதி ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைய முடியும்.   ஆரம்பகட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, மத்தியப்பிரதேச முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்பட உள்ளது  

                                                       



(Release ID: 1641336) Visitor Counter : 145