நிதி அமைச்சகம்
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி சுங்கம் 66 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடத்தப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது.
Posted On:
24 JUL 2020 7:28PM by PIB Chennai
டெல்லி சுங்க, இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையம், 2020 ஜூலை 23ஆம் தேதி, கோவிட் -19 காரணமாக துபாயில் சிக்கித் தவித்த 13 இந்தியப் பயணிகள், எச்சரிக்கை செய்தி அச்சிடப்பட்டாமல் இருக்கும் வெளிநாட்டு சிகரெட்டுகளை (3700 தண்டாக்கள்) கடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளது. பயணிகள் துபாயில் இருந்து டெல்லிக்கு விமான எண் EK-510 இல் பயணம் செய்து 23.07.2020 அன்று காலை 09:05 மணிக்கு புதுடெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி -3 க்கு வந்தனர். இந்த 13 இந்தியப் பயணிகள் பரிசோதனை எல்லையை (Green Channel) கடந்ததும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிகரெட்டுகள் சுங்கச் சட்டம், 1962 இன் பிரிவு 110 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் கூட்டு மதிப்பு ரூ. 66,60,000 / - (ரூபாய் அறுபத்து ஆறு லட்சம் அறுபதாயிரம்).
சுங்கச்சட்டம், 1962இன் பிரிவு 104இன் படி 13 இந்தியப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
****
(Release ID: 1641049)
Visitor Counter : 187