பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கும், இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரும் தொலைபேசியில் விவாதித்தனர்.

Posted On: 24 JUL 2020 3:49PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸுடன் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர்த்திறம் சார்ந்த ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர், அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து ஒத்துழைப்பதில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர், இது இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், மனிதாபிமான காரணங்களுக்கும் உதவும். மேலும், இந்தியாவில், பாதுகாப்பு உற்பத்தியில் புதிய தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (FDI) திட்டத்தின் கீழ் இஸ்ரேலியப் பாதுகாப்பு நிறுவனங்களை அதிக முதலீடுகளைச் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  இரு அமைச்சர்களும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் இந்தியாவுக்கு வருகை தருமாறு திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்ததற்கு, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சாதகமாக பதிலளித்தார்.

****
 



(Release ID: 1640968) Visitor Counter : 184