மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தனிநபர் அல்லாத தரவுக் கட்டமைப்பு குறித்த பொதுமக்களின் கருத்துக்களை நிபுணர் குழு வரவேற்கிறது

Posted On: 23 JUL 2020 5:50PM by PIB Chennai

தனிநபர் அல்லாத தரவு ஆளுமைக் கட்டமைப்பு குறித்த நிபுணர் குழு இன்று மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்,  தனிநபர் அல்லாத தரவு ஆளுமை பற்றிய பல்வேறு அம்சங்கள் பற்றி விளக்கியது. திரு. கிருஷ் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழுவின் மற்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அவரும், குழுவின் மற்ற உறுப்பினர்களும், தனிநபர் அல்லாத தரவு ஆளுமையில் உருவெடுத்து வரும் பல்வேறு புதிய எண்ணங்கள் பற்றி விளக்கினர். தனிநபர் அல்லாத தரவு, சமூக தரவு, இந்த தரவில் உள்ள பொருத்தமான உரிமைகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றுக்கு அவர்கள் விளக்கமளித்தனர். பொதுமக்கள், சமூகம், தனியார் ஆகிய மூன்று பிரிவு கருத்தியல்களில், தரவு வணிகம், வெளிப்படையான தரவுப் பதிவேடுகள் அணுக்கம் , அநாமதேயத் தரவுக்கான ஒப்புதல், தனிநபர் அல்லாத தரவு பற்றிய உணர்திறன், இறையாண்மை, முக்கியப் பொதுநலன்கள், பொருளாதார நோக்கங்கள் பற்றிய தரவுப் பகிர்வு ஆகியவை பற்றிய வரையறை குறித்து விளக்கப்பட்டது. 

 மூலத் தரவு , பெறப்பட்ட தரவு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அக்குழு பதிலளித்தது. தனிநபர் அல்லாத தரவின் ஒழுங்குமுறை அம்சங்கள், தரவின் பொருளாதார மதிப்பைப் பயன்படுத்துதல், இந்திய மக்கள் மற்றும் சமூகத்திற்குப் பயன்படும் தனிநபர் அல்லாத தரவைப் பயன்படுத்தி, கட்டமைப்பை ஏற்படுத்தும் டிஜிட்டல் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு தொடர்பான பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்தும் நிபுணர் குழு பதிலளித்தது.

வரைவு அறிக்கை குறித்து நடைபெறும் ஆலோசனையில், இது தொடர்புடையவர்கள் அதிக அளவில்  பங்கேற்பதை ஊடகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்தது. கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆகும். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள https://www.mygov.in/task/ என்ற தளத்தைப் பயன்படுத்தவும்.

****



(Release ID: 1640824) Visitor Counter : 221