பாதுகாப்பு அமைச்சகம்
லே யில் திஹார் என்ற அமைப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் கோவிட்-19 நோய்த்தொற்று சோதனை வசதியை உருவாக்கியுள்ளது
Posted On:
23 JUL 2020 12:59PM by PIB Chennai
லே யில் திஹார் எனப்படும் அதிஉயர இடத்திற்கான பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் கோவிட்-19 நோய்த்தொற்று சோதனை நிலையத்தை உருவாக்கியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் கரோனா பாதித்தவர்ளை அடையாளம் காணும் சோதனைகளை விரைவுபடுத்த இது உதவும். இந்த நிலையம் நோய்த்தோற்று எற்பட்டிருப்பவகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் உதவும் . இந்திய மருத்துவ ஆராய்சி சபை விதித்துள்ள பாதுகாப்புத் தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை லடாக் துணை நிலை ஆளுநர் திரு ஆர். கே. மாதூர் திறந்து வைத்தார்.
திஹாரில் உள்ள இந்தச் சோதனை நிலையத்தில் நாளொன்றுக்கு 50 மாதிரிகளைச் சோதிக்க வசதி உள்ளது. கோவிட் சோதனைகளில் பயிற்சி அளிப்பதற்கும் இந்த நிலையம் பயன்படும், எதிர்கால உயிரி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும், வேளாண் - விலங்கியல் நோய்கள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளிலும் இது உதவும்.
துணை நிலை ஆளுநர் தமது உரையில், கோவிட்-19க்கு எதிராகப் போரிட, பாதுகாப்பு ஆராய்ச்சி சபை எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டினார். தீஹாரில் இந்த நிலையம் அமைய உதவியமைக்காக பாதுகாப்புத்துறைச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சித் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ஜி சதீஷ் ரெட்டிக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த நிறுவனம் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
*****
(Release ID: 1640671)
Visitor Counter : 269